மும்பை : ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் இயக்குனர் குமார் சங்கக்கரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ரவிச்சந்திர அஸ்வின் சரியான நேரத்தில் ரிட்டயர்டு ஹர்ட்டு முறையில் வெளியேறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரவிச்சந்திர அஸ்வின் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிட்டயர்டு ஹர்ட்டு முறையில் காயமுற்று வெளியேறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரவிச்சந்திர அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரிட்டயர்டு ஹர்ட்டு முறையில் சரியான நேரத்தில் வெளியேறினார் என குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
அதாவது ஆட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த குமார் சங்கக்கரா, “அதை செய்ய அவருக்கு அது சரியான தருணம்” என்றார்.
இதையும் படிங்க : RR vs LSG: கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய குல்தீப் சென் - ஆர்ஆர் மீண்டும் முதலிடம்!