ETV Bharat / sports

TNPL 2021: இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ்

திண்டுக்கல் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

TNPL 2021
TNPL 2021
author img

By

Published : Aug 14, 2021, 3:05 AM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசனின் ப்ளே-ஆஃப் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிப்போட்டிக்கு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இன்று (ஆக.13) மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணி 103 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஹரி நிஷாந்த் 56 ரன்களை சேர்த்திருந்தார். சென்னை அணியில் சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்‌.

4 ஓவர்கள் மீதம்

எளிய வெற்றியைத் துரத்திய சென்னை அணிக்கு, கேப்டன் கௌசிக் காந்தி - ஜெகதீசன் ஜோடி சிறந்த தொடக்கத்தை அளித்தது.

நிதானமாக ஆடிய ஜெகதீசன் 21(27) ரன்களிலும், கௌசிக் காந்தி 53(41) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர், ராஜகோபால் - சசிதேவ் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

சென்னை அணி 16 ஓவர்களிலேயே தனது வெற்றி இலக்கை எட்டி, தொடரின் இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

சென்னை அணியில் ராதாகிருஷ்ணன் 16 ரன்களுடனும், சசிதேவ் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் சுவாமிநாதன், சுதேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்திக்கிறது. 2017, 2019 தொடர்களில் சென்னை அணி டிஎன்பிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.