ETV Bharat / sports

சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியுமா..?

author img

By

Published : Apr 22, 2022, 9:31 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியுமா..?. இந்த சங்கடமான கேள்வி சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் எழுந்துவிட்டது. இந்த கேள்விக்கான பதில் இங்கே உள்ளது.

will-csk-qualify-for-playoffs-2022
will-csk-qualify-for-playoffs-2022

ஜாம்பவான்கள் மோதல்

ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டம் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைய முடியுமா...? இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெறவேண்டும்...? என்னும் கேள்விகளை ரசிகர்கள் மனதில் தூண்டிவிட்டுள்ளது. நேற்றைய போட்டியில், தோனியின் அதிரடி ஆட்டம் துவண்டுபோன ரசிகர்களை உயிர்பெற செய்துள்ளது.

மும்பை அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் சென்னையின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது உனத்கட் வீசிய முதல் பந்தில் களத்திலிருந்த பிரிட்டோரியஸ் ஆட்டமிழந்தார். மறுப்புறம் தோனி அமைதியாகவே இருந்தார். இதையடுத்து 2ஆவது பந்தை சந்தித்த பிராவோ ஒரு ரன் எடுக்க, தோனியின் வசம் ஸ்டிரைக் திரும்பியது.

அப்போது தோனி 3ஆவது பந்தில் சிக்ஸர் தெரிக்கவிட்டார். இதையடுத்து 4ஆவது பந்தில் பவுண்டரியும், 5ஆவது பந்தில் 2 ரன்களையும் எடுத்தார். இப்போது 1 பந்துக்கு 4 ரன்கள் தேவை. ஒட்டுமொத்த காண்களும் தோனியின் மீதே இருந்தன.

தோனியும் அந்த மேஜிக்கை செய்தார். கடைசி பந்தில் பவுண்டரி பறந்தது. சென்னை அணி அபார வெற்றிபெற்றது. ஐபிஎல் ஆட்டத்தை தாண்டி தோனியின் அதிரடியை நீண்ட நாள்களுக்கு பிறகு பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர். இந்த சீசனில் அதிக பார்வையாளர்கள் பார்த்த ஆட்டமும் இதுதான்.

பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்னை நுழைய முடியுமா...?

சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. மொத்தம் 7 போட்டிகளில் 5 தோல்வி, 2 வெற்றி என்ற கணக்கில் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பிளே ஆஃப் செல்ல 16 புள்ளிகள் வேண்டும். அதாவது ஒரு அணிக்கு மொத்தம் உள்ள 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெறவேண்டும்.

ஏற்கனவே சென்னை அணிக்கு 7 போட்டிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள 7 போட்டிகளிலும் சென்னை அணி போராட வேண்டிய நிலையில் உள்ளது. இதில் 6 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மற்ற அணிகளில் ஒரு அணி சென்னை போலவே 16 புள்ளிகளை பெற்றிருந்தால் மட்டுமே, இந்த வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஐபிஎல் சீசன்களை வைத்து பார்க்கும்போது, பல சீசன்களில் 14 புள்ளிகளே பிளே ஆஃப் சுற்றுக்கு போதுமானதாக இருந்திருக்கிறது. அந்த வகையில், சென்னை அணி குறைந்தது 5 போட்டிகளிலாவது வெற்றிபெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற புள்ளிப்பட்டிலில் முன்னிலையில் இருக்கும் அணிகளுடன் சென்னை அணி போட்டிபோட வேண்டும்.

குறிப்பாக, மே 12ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை அணி மோத வேண்டும். அந்த ஆட்டம் சென்னையின் பிளே ஆஃப் முற்றுப்புள்ளி வைக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவை சென்னை அணி தவிடு பொடியாக்கிவிட்டது. இதனால் அன்றையப் போட்டியில் மும்பை பழிக்குபழி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நிகரானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் வென்று சென்னை வரலாறு படைக்குமா என்பதை அடுத்த இரண்டு ஆட்டங்களில் பார்த்துவிடலாம்.

போட்டிதேதிஅணிகள் மைதானம்நேரம்
8ஏப்ரல் 25பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்வான்கடே மைதானம் இரவு 7:30 மணி
9மே 1சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் எம்சிஏ மைதானம் இரவு 7:30 மணி
10மே 4ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்எம்சிஏ மைதானம் இரவு 7:30 மணி
11மே 8சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்டிஒய் பாட்டீல் மைதானம் இரவு 7:30 மணி
12மே 12சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்வான்கடே மைதானம் இரவு 7:30 மணி
13மே 15சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்வான்கடே மைதானம்பிற்பகல் 3:30 மணி
14மே 20ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் பிரபோர்ன் மைதானம் இரவு 7:30 மணி

இதையும் படிங்க: சர்வதேச போட்டிகளில் இருந்துதான் ஓய்வு : ஃபினிஷிங்கில் இல்லை - மீண்டும் கலக்கிய தல தோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.