ETV Bharat / sports

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்! - கேப்டனான கேன் வில்லியம்சன்

நியூடெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

SunRisers
SunRisers
author img

By

Published : May 1, 2021, 7:46 PM IST

நடப்பு ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 6 போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில், சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளதகாக அந்த அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை இனி கேன் வில்லியம்சன் ஏற்பார். இனி எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் கேன் வில்லியம்சனே கேப்டனாக இருப்பார். இது நாளை நடைப்பெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து அமலுக்கு வருகிறது.

கேப்டன்சி பொறுப்பை மாற்றுவது குறித்து நீண்ட ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளைய போட்டியில் வெளிநாட்டு தொடக்க வீரர்களின் ஜோடியும் மாற்றப்படும். டேவிட் வார்னர் காலம் காலமாக ஹைதரபாத் அணிக்கு சிறப்பான பங்கை அளித்துகிறார். இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் வார்னர் பங்களிப்பை தொடர்ந்து வழங்குவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.