ETV Bharat / sports

GT vs RR: குஜராத்துடன் மோதும் ராஜஸ்தான் - புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா? - 4 அணிகள் 10 புள்ளிகள்

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Today ipl match
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : May 5, 2023, 3:08 PM IST

Updated : May 5, 2023, 3:25 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று (மே 5), குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, இப்போட்டியில் வெற்றிபெற்றால் முதலிடத்துக்கு முன்னேறும். எனினும், மும்பை அணியுடன் கடந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணியை மிரட்டுகிறார். மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் 62 பந்துகளில் 124 ரன்களை விளாசி மிரள வைத்தார். அவர் கடந்த 4 ஆட்டங்களில் முறையே 44, 47, 77, 124 ரன்களை எடுத்து, நம்பிக்கைத் தருகிறார். ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மேயர் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் தடுமாறிய நிலையில், இப்போட்டியில் தவறை திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், அஸ்வின், சாஹல் நம்பிக்கை அளிக்கின்றனர். அத்துடன் சொந்த மண்ணில் விளையாடுவது ராஜஸ்தான் அணிக்குக் கூடுதல் பலம்.

குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஆட்டத்தில், டெல்லி அணியுடன் தோல்வியைத் தழுவியது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவைத் தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தனர். எனவே, இன்றைய ஆட்டத்தில் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்படும் என நம்பலாம். சாஹா, சுப்மன் கில், விஜய் சங்கர், டேவிட் மில்லர் நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷீத் கான் நம்பிக்கை அளிக்கின்றனர். அதேநேரம் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டில், சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கிறார்.

ராஜஸ்தான் உத்தேச அணி: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், துருவ் ஜூரல், ஜேசன் ஹோல்டர், அஸ்வின், சாஹல், சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், குல்தீப் யாதவ்/குல்தீப் சென்.

குஜராத் உத்தேச அணி: சுப்மன் கில், விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபிநவ் மனோகர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, ஷமி, மொகித் சர்மா.

4 அணிகள் 10 புள்ளிகள்: புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான், பெங்களூரு, மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகள் 10 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 7 இடங்களில் உள்ளன. 4 அணிகள் அங்கம் வகிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் ஒரு அணி குறைந்தது 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், 16 புள்ளிகளைப் பெற்றிருப்பது அவசியம்.

ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் சம புள்ளிகளைப் பெற்றிருந்தால், அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளின் வெற்றி எண்ணிக்கையும் ஒன்றாக இருந்தால், ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தேர்வாகலாம். தற்போது 4 அணிகள் ஒரே புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், அடுத்து வரும் போட்டிகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் குவாலிபயர் (Qualifier)-1க்குத் தகுதி பெறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும். தோல்வி அடைந்த அணி, Qualifier-2ல் விளையாட வேண்டியிருக்கும். 3 மற்றும் 4ம் இடத்தில் இருக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier-2ல் விளையாட வேண்டும். தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.

இதையும் படிங்க: IPL Rivalry week: இந்த வாரம்.. அனல் பறக்கும் வாரம்! வரிந்துக் கட்டும் அணிகள்

Last Updated : May 5, 2023, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.