சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில், சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என இந்தியன் சிமென்ட்ஸ் நிர்வாகத் தலைவரும், சென்னை அணி உரிமையாளருமான ஸ்ரீநிவாசன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நவ. 20ஆம் தேதி (அதாவது இன்று) சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது.
-
Thala Dharisanam 💛😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
📍Anbuden
Register now ➡️ https://t.co/mn34ApWb4z to watch the Super Celebrations LIVE at 5⃣:3⃣0⃣ PM & #WhistlePodu 🦁 @TheIndiaCements pic.twitter.com/xQd6VgRrh9
">Thala Dharisanam 💛😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021
📍Anbuden
Register now ➡️ https://t.co/mn34ApWb4z to watch the Super Celebrations LIVE at 5⃣:3⃣0⃣ PM & #WhistlePodu 🦁 @TheIndiaCements pic.twitter.com/xQd6VgRrh9Thala Dharisanam 💛😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021
📍Anbuden
Register now ➡️ https://t.co/mn34ApWb4z to watch the Super Celebrations LIVE at 5⃣:3⃣0⃣ PM & #WhistlePodu 🦁 @TheIndiaCements pic.twitter.com/xQd6VgRrh9
தோனிக்காக காத்திருந்த ஸ்டாலின்
இதை முன்னிட்டு, ஸ்ரீநிவாசன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து முதலமைச்சரை சந்தித்து, சென்னை அணிக்கான பாராட்டு விழாவிற்கான அழைப்பிதழைக் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 16) வழங்கினார். இந்நிலையில், இவ்விழாவில் கலந்துகொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று சென்னை (MS Dhoni in Chennai) வந்தடைந்தார்.
முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோது, "எம்.எஸ். தோனி, இந்த வெற்றியைக் கொண்டாட சென்னை அன்புடன் (Anbu DEN - சென்னை நகரத்தை சிஎஸ்கே அணியின் 'அன்பான குகை' என்று ரசிகர்கள் அழைப்பது வழக்கம்) காத்திருக்கிறது" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனிக்காகக் காத்திருக்கிறது சென்னை: ஸ்டாலின் அடித்த விசில்!