மும்பை: ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டம் டிஒய் பாட்டீல் மைதானத்தில் மே 8ஆம் தேதி நடந்தது. இதில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இறுதியில், சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த வகையில், டி20 போட்டிகளில் கேப்டனாக 6,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி ஆரம்பத்திலிருந்தே கேப்டன் பதவியை வகித்திருந்தால், சாதனை முன்னதாகவே படைத்திருப்பார். இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் லாஸ்ட் பெஞ்ச் அணிகள் மோதல்