ETV Bharat / sports

LSG vs SRH: மான்கட், பூரன் அதிரடி - லக்னோ அணி அபார வெற்றி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Lucknow team won
லக்னோ அணி வெற்றி
author img

By

Published : May 13, 2023, 8:25 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அன்மோல்ப்ரீத் சிங் 36, அபிஷேக் சர்மா 7 ரன்களில் வெளியேறினர்.

ராகுல் திரிபாதி 20, கேப்டன் மார்க்ரம் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், அதிரடியாக விளையாடிய கிளாசென் 47 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்துல் சமத் 37 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் க்ருணல் பாண்ட்யா 2 விக்கெட்களை வீழ்த்தினார். யுத்விர் சிங், ஆவேஷ் கான், யஷ் தாகூர், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

The controversial ball
சர்ச்சையை ஏற்படுத்திய பந்து

போட்டி நிறுத்தம்: முன்னதாக கடைசி ஓவரை லக்னோ வீரர் ஆவேஷ் கான் வீசினார். அப்துல் சமத் எதிர்கொண்ட 3வது பந்து இடுப்புக்கு மேலே வந்தது. அதை நோ பால் என கள நடுவர் அறிவித்தார். ஆனால் அதை எதிர்த்து, லக்னோ கேப்டன் க்ருணல் பாண்ட்யா அப்பீல் செய்தார். ஆனால் 3வது நடுவர் அதை சரியான பந்து என அறிவித்தார்.

இதனால் சன் ரைசர்ஸ் வீரர்கள் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆத்திரம் அடைந்த ஹைதராபாத் ரசிகர்கள், தண்ணீர் பாட்டிலை மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த லக்னோ வீரர்கள் மீது வீசினர். இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கு எதிராக கோலி... கோலி... என சன் ரைசர்ஸ் ரசிகர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் நடுவர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர்.

பின்னர் லக்னோ அணி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், மேயர்ஸ் 2, குயின்டான் டி காக் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மான்கட், ஸ்டொய்னிஸ் அதிரடியாக விளையாடினர். 40 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டொய்னிஸ் வெளியேறினார். தொடர்ந்து மன்கட்டுடன் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன் அதிரடியாக ரன் குவித்தார். இதனால் 19.2 ஓவர்களில் லக்னோ அணி வெற்றி இலக்கை எட்டியது.

மான்கட் 64, பூரன் 44 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி, 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன் ரைசர்ஸ் அணியில் பிலிப்ஸ், மார்க்கண்டே, அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை லக்னோ வீரர் மான்கட் தட்டிச்சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.