ETV Bharat / sports

மீண்டும் மகளிர் மினி ஐபிஎல் - களத்தில் மந்தனா, ஹர்மன்பீரித் கவுர்! - ஸ்மிருதி மந்தனா

இம்மாதம் புனேவில் தொடங்கவுள்ள மகளிர் டி- 20 போட்டிகளுக்கான அணி வீராங்கனைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல்
மகளிர் ஐபிஎல்
author img

By

Published : May 16, 2022, 7:41 PM IST

கரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மகளிர் டி- போட்டிகள் மீண்டும் இம்மாதம் 23ஆம் தொடங்கஉள்ளது. இந்த நிலையில் சூப்பர் நோவாஸ் , டிரயல் பிளேசர்ஸ் மற்றும் வெலோசிட்டி அணிகளின் கேப்டன்களையும் , வீராங்கனைகளையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

சூப்பர் நோவாஸ்: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியில் தனியா பாட்டியா, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அலானா கிங், ஆயுஷ் சோனி, வி சந்து, வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டாட்டின், ஹர்லீன் தியோல், மேக்னா சிங், மோனிகா பட்டேல், முஸ்கான் மாலிக், பூஜா, பிரியா புனியா, ராஷி கனோஜியா, சோஃபி எக்லெஸ்டோன், தென் ஆப்பிரிக்கா கேப்டன் சுனே லூஸ், மன்சி ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிரயல் பிளேசர்ஸ்: ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரயல் பிளேசர்ஸ் அணியில் பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேலி மேத்யூஸ், ஜெமியா ராட்ரிக்ஸ், பிரியங்கா பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ரேனுகா சிங், ரிச்சா கோஷ், மேகனா, சைகா இஷாக், சுஜாதா மாலிக், போகர்கர், சோபியா பிரவுன், வங்கதேச வீராங்கனைகள் சல்மா காதுன், சர்மின் அக்தர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வெலோசிட்டி: தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி அணியில் ஸ்நே ராணா, ஷபாலி வர்மா, அயபோங்கா காகா, கே.பி நவ்கிரே, காத்ரின் கிராஸ், கீர்த்தி ஜேம்ஸ், லாரா வால்வார்ட், மாயா சோனவனே, நத்தகன் சந்தம், ராதா யாதவ், ஆர்த்தி கேதர், ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் பகதூர், யஷ்திகா பாட்டியா, பிரனாவி சந்த்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூத்த வீராங்கனைகளான மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் இம்முறை இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அடுத்த ஆண்டு 6 அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்த முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 1983 உலகக்கோப்பை வெற்றிக்கு இணையானது தாமஸ் கோப்பை தங்கம் - பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.