துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. பயோ-பபுளில் இருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக இத்தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. தற்போது, ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
குறைவான இருக்கைகள்
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் கடந்த சீசன் இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. ஆனால், தற்போது நிலமை சற்று சீராகி வருகிறது.
இந்நிலையில், துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
NEWS - VIVO IPL 2021 set to welcome fans back to the stadiums.
— IndianPremierLeague (@IPL) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
More details here - https://t.co/5mkO8oLTe3 #VIVOIPL
">NEWS - VIVO IPL 2021 set to welcome fans back to the stadiums.
— IndianPremierLeague (@IPL) September 15, 2021
More details here - https://t.co/5mkO8oLTe3 #VIVOIPLNEWS - VIVO IPL 2021 set to welcome fans back to the stadiums.
— IndianPremierLeague (@IPL) September 15, 2021
More details here - https://t.co/5mkO8oLTe3 #VIVOIPL
நாளை முதல் முன்பதிவு
ஐக்கிய அரபு அமீரக அரசின் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான டிக்கெட்டை ஐபிஎல் இணையத்தளத்தில் நாளை (செப்.16) முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்க இருக்கிறது. தற்போது, ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது வீரர்களும் பெரும் உற்சாகத்தை அளிக்கும் என கிரிக்கெட் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சிபிஎல்லில் காயம்: சிஎஸ்கேவில் ஆடுவாரா டூ ப்ளசிஸ்?