கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்க்ளூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்கத்தில் கொல்கத்தா அணிக்கு ஆமை வேகத்தில் ரன்கள் சென்று கொண்டு இருந்தன. டேவிட் வில்லே வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், மந்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 26 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் குர்பாஸ் அரைசதம் விளாசினார். 53 ரன்கள் எடுத்திருந்த போது கர்ண் சர்மா பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் நிதிஷ் ராணா 1 ரன்னில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ரசல் ரன் ஏதும் எடுக்காமல் கர்ண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
தொடர்ந்து ரிங்கு சிங்குடன், ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். 46 ரன்கள் எடுத்திருந்த போது ரிங்கு ஆட்டமிழந்தார். 29 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஷர்துல் தாகூர் பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 204 ரன்களை எடுத்தது.
தொடக்க வீரர் குர்பஸ் (53 ரன்), ரிங்கு சிங் (46 ரன்), ஹர்துல் தாகூர் (68 ரன்) ஆகியோரின் ஒத்துழைப்பால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 204 என்ற இமாலய இலக்கை எட்டியது. பந்துவீச்சை பொறுத்தவரை பெங்களூரு அணியில் டேவிட் வில்லே, கர்ண் சர்மா தலா 2 விக்கெட்களை வீழத்தினர். சிராஜ், பிரேஸ்வெல், ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க வீர்ரகள் சிறிது ஒத்துழைப்பு கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரனகளில் நடைய கட்டினர். விரார் கோலி (21 ரன்) கேப்டன் பாப் டு பிளிசிஸ் (23 ரன்) மைக்கெல் பிரஸ்வெல் (19 ரன்) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் வெறும் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இறுதியில் களமிறங்கிய டேவிட் வில்லே (20 ரன்), மற்றும் ஆகாஷ் தீப் (17 ரன்) ஆகியோர் மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினர். 17 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 123 ரனகளுக்கு பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பெங்களூரு அணியில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் ஷர்மா 3 விக்கெட்டுகளும், சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் ஜொலித்த ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
-
In Match 9️⃣ of #TATAIPL between #KKR & #RCB
— IndianPremierLeague (@IPL) April 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here are the Visit Saudi Beyond the Boundaries Longest 6, Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match award winners.@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia pic.twitter.com/gNN2U4jOyk
">In Match 9️⃣ of #TATAIPL between #KKR & #RCB
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
Here are the Visit Saudi Beyond the Boundaries Longest 6, Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match award winners.@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia pic.twitter.com/gNN2U4jOykIn Match 9️⃣ of #TATAIPL between #KKR & #RCB
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
Here are the Visit Saudi Beyond the Boundaries Longest 6, Upstox Most Valuable Asset, Herbalife Active Catch of the match award winners.@VisitSaudi | #VisitSaudi | #ExploreSaudi@upstox | #InvestRight with Upstox@Herbalifeindia pic.twitter.com/gNN2U4jOyk
இதையும் படிங்க : நத்தம் அருகே பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை - அலறியடித்து ஓடிய பயணிகள்!