குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மான் கில் விருத்திமான் சஹா ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விருத்தமான் சஹா, சாவ்லா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் சுப்மான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சுதர்சன் அரைசதத்தை நெருங்கி வந்த நிலையில், 31 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மான் கில் 49 பந்துகளில் சதமடித்தார். இந்த தொடரில் அவர் அடித்த 3 ஆவது சதமாகும். கடைசி 4 இன்னிங்ஸ்களில் 3 சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் 60 பந்துகளில் 7 பவுண்டரி 10 சிக்சருடன் 129 ரன்கள் குவித்து ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடி கடைசி பந்தில் சிக்சருடன் முடித்து வைத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28 ரன்களும், ரஷித்கான் 2 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில், மத்வால், சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 234 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்குக் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடக்க பேட்டராகக் களமிறங்கவில்லை. இவருக்குப் பதில் நெஹால் வதேரா களமிறங்கினார்.
முதல் ஓவர் வேகப்பட்டந்து வீச்சாளர் ஷமியிடம் கொடுக்கப்பட்டது. முதல் ஓவர் 5ஆவது பந்திலேயே வதேரா விக்கெட்டை எடுத்தார். புல் ஷாட் விளையாடப் பார்த்த வதேரா. பேட்டின் விளிம்பில்பட்டு கீப்பரிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து கிரீன் களமிரங்கி ஆடினார். தொடர்ந்து, 3ஆவது ஓவர் வீசிய ஷமியிடம் கேப்டன் ரோஹித் விக்கெட்டை பறிகொடுத்தார். புல் ஷாட் விளையாடப் பார்த்தார். பேட்டின் விளிம்பில் பட்டு பந்து மேலே சென்ற நிலையில் லிட்டில் கேட்ச் பிடித்துவிட்டார்.
பின்னர், வர்மா நிதார்ணமாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 6ஆவது ஓவர் வீசிய ரஷித் காணில் பந்தில் அவுட் ஆனார். ஸ்வீப் ஷாட் விளையாடப் பார்த்தபோது போல்ட் ஆனார். நெருக்கடியுடன் விளையாடிய மும்பை அணி 62 வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இறுதிப்போட்டியில் சென்னை அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ள உள்ளது.