லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 45வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை.
அதன்படி லக்னோ அணியில் மனன் வோஹ்ரா, கைல் மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வோஹ்ரா 10, மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். கரண் சர்மா 9, கேப்டன் க்ருணல் பாண்ட்யா 0, ஸ்டொய்னிஸ் 6 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர். நிகோலஸ் பூரன் 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் படோனி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
19.2 ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. படோனி 59 ரன்களுடனும், கவுதம் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து கனமழை பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
பந்துவீச்சைப் பொறுத்தவரை சென்னை அணியில் மொயீன் அலி, தீக்சனா, பதிரானா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.