ETV Bharat / sports

IPL FINAL: சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? வரிந்து கட்டும் குரு - சிஷ்யன்! - தோனி பாண்ட்யா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை அணியை எதிர்கொள்கிறது. அனுபவம் வாய்ந்த மகேந்திர சிங் தோனி தலைமையிலான மஞ்சள் படை, இளம் பட்டாளங்களை கொண்ட டைட்டன்ஸ் அணியுடன் மல்லுகட்டுகிறது. இப்போட்டியில் வென்று 16வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ipl
ஐபிஎல்
author img

By

Published : May 28, 2023, 6:26 AM IST

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் லீக் ஆட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்திய சென்னை அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் ஆட்டத்தில் சந்தித்த இரு அணிகளும், இறுதிப்போட்டியிலும் மல்லுகட்டுகின்றன.

மஞ்சள் படை எப்படி?: நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 17 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். இந்த ஜோடி சேர்க்கும் ரன்கள் தான், அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவியாக இருந்து வருகிறது. மிடில் ஆர்டரில் ஷிவம் துபே அதிரடி காட்டினாலும், சில நேரங்களில் விரைவில் விக்கெட்டை இழந்து விடுகிறார். ரஹானே, மொயின் அலி, அம்பதி ராயுடு சுமாரான பங்களிப்பை தருகின்றனர்.

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடைசி கட்டத்தில் களம் இறங்கினாலும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியை சிறப்பாக செய்கிறார். மூட்டில் காயத்துடன் விளையாடி வரும் கேப்டன் தோனி, பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும் அணியை வழிநடத்துவதில் அதிக அக்கறை கொண்டுள்ளார்.

பந்துவீச்சில் தீபக் சாஹர், தீக்சனா வலுசேர்க்கின்றனர். துஷார் தேஷ்பாண்டே, பதிரனா ஆகியோர் டெத் ஓவர்களை சிறப்பாக வீசினாலும், அடிக்கடி வைட் பந்துகளை வீசி கடுப்பேற்றுகின்றனர். பந்துவீச்சாளர்கள் எக்ஸ்ட்ரா ரன் கொடுப்பது எதிரணிக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதால், கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

Chennai vs Gujrat
சென்னை vs குஜராத்

தோனி 250: இன்றைய ஐபிஎல் போட்டி, சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 250வது ஆட்டமாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

மிரட்டும் பேட்டிங்: குஜராத் அணி, 16 ஆட்டங்களில் பங்கேற்று 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், எதிரணிகளை மிரட்டுகிறார். அவரது விக்கெட்டை சென்னை பவுலர்கள் எவ்வளவு வேகமாக வீழ்த்துகிறார்களோ அவ்வளவு நல்லது. இல்லையெனில் கில்லின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக அமைந்துவிடும். நடப்பு சீசனில் 3 சதங்களுடன் 851 ரன்களை அவர் குவித்துள்ளார்.

சாஹா, சாய் சுதர்சன், பாண்ட்யா, விஜய் சங்கர், மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ள ரஷித் கானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பந்துவீச்சில் முகமது ஷமி, மொகித் சர்மா, நூர் அகமது நம்பிக்கை தருகின்றனர். கடந்த தொடரில் மகுடம் சூடிய குஜராத் அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் இறங்கும். அதேநேரம், அனுபவம் வாய்ந்த தோனி தலைமையிலான சென்னை அணி, அவ்வளவு எளிதில் கோப்பையை விட்டுக் கொடுத்து விடாது என்பது ரசிகர்களின் நம்பிக்கை. குரு - சிஷ்யனான தோனி, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இரு அணிகள் மோத உள்ள நிலையில் ரசிகர்களின் ஆரவாரத்தால் அகமதாபாத் மைதானம் அதிரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Chennai vs Gujrat
சென்னை vs குஜராத்

மைதானம் எப்படி?: அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதமாக உள்ளது. கடந்த 8 ஆட்டங்களில் அந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 193 ரன்கள். இதில் 5 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் நிறைவு விழா: முன்னதாக, ஐபிஎல் நிறைவு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகி ஜோனிதா காந்தி, பாப் பாடகர் டிவைன் ஆகியோரின் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வானிலை நிலவரம்: அகமதாபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மழை அச்சுறுத்தல் இல்லை.

சென்னை உத்தேச அணி: ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ஷிவம் துபே, ரஹானே, மொயின் அலி, அம்பதி ராயுடு, ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், தேஷ்பாண்டே, தீக்சனா, பதிரனா.

குஜராத் உத்தேச அணி: சுப்மன் கில், சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், திவேட்டியா, நூர் அகமது, மொகித் சர்மா, முகமது ஷமி, ஜோஸ் லிட்டில்.

இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் விவரம்:

* 2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்

* 2009 - டெக்கான் சார்ஜர்ஸ்

* 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்

* 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்

* 2012- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

* 2013 - மும்பை இந்தியன்ஸ்

* 2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

* 2015 - மும்பை இந்தியன்ஸ்

* 2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

* 2017 - மும்பை இந்தியன்ஸ்

* 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்

* 2019 - மும்பை இந்தியன்ஸ்

* 2020 - மும்பை இந்தியன்ஸ்

* 2021- சென்னை சூப்பர் கிங்ஸ்

* 2022 - குஜராத் டைட்டன்ஸ்

இதையும் படிங்க: IPL 2023: ஐபிஎல் பரிசு மழை... வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.