ETV Bharat / sports

IPL 2022: டாஸ் வென்றது ஹைதராபாத்.. ஆனால்...! - லக்னோ

ஹைதராபாத் டாஸ் வென்ற நிலையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ஸ்-ஐ பேட்டிங் செய்ய பணித்தது.

IPL
IPL
author img

By

Published : Apr 4, 2022, 8:04 PM IST

மும்பை : இன்றைய ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோதிய போட்டி டாக்டர் டிஒய் பாட்டீல் அகதமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத், லக்னோவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், குவிண்டன் டிகாக் ஆகியோர் களம் இறங்கினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குவிண்டன் டிகாக் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கேனே வில்லியம்சனிடம் கேட்ச் ஆகி 4 பந்துகளில் 1 ரன்னில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

அடுத்து வந்த இவின் லெவிஸ்-மும் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் குவிண்டன் டிகாக்கை பின்தொடர்ந்தார். எனினும் மறுபுறம் ராகுல் நிலைத்து நின்று ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இவருக்கு பக்க பலமாக மணீஷ் பாண்டே சிறிது நேரம் ஈடுகொடுத்தார். அவரும் 10 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோமரியோ ஷெப்பர்ட்டு பந்துவீச்சில் புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தற்போது ராகுல், தீபக் ஹூடா களத்தில் உள்ளனர். அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்துள்ளார். மறுமுனையில் ஓப்பனர் ராகுல் 13 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்துள்ளார். லக்னோ அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.