PBKS vs LSG: இன்றைய ஆட்டம் பஞ்சாப் vs லக்னோ - ஐபிஎல் 2022
ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீச்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை: ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (ஏப். 29) 7:30 மணிக்கு எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகள் 3 தோல்விகள் என்ற கணக்கில் 4ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகள், 4 தோல்விகள் என்ற கணக்கில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல்முறை மோதுகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக்(கீப்பர்), கேஎல் ராகுல்(கேப்டன்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.
பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (கேப்டன்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க: DC vs KKR: குல்தீப் சுழலிலும், பாவெல் பவரிலும் வென்றது டெல்லி