ETV Bharat / sports

RR vs RCB: தொடர் தோல்வியில் ஆர்சிபி; ஆர்ஆர்-க்கு 6ஆவது வெற்றி! - ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

RR vs RCB
RR vs RCB
author img

By

Published : Apr 27, 2022, 8:13 AM IST

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று (ஏப். 26) மோதின. புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரியான் அதிரடி: இதன்படி, களமிறங்கிய ராஜஸ்தான் அணி வழக்கம்போல் அல்லாமல், விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ரியான் பராக் மட்டும் விரைவாக அரைசதம் அடித்து ஆறுதலான ஸ்கோருக்கு இட்டுச்சென்றார். ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்தது. ஆர்சிபி சார்பில் சிராஜ், ஹசல்வுட், ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரியான் பராக் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 56 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்: பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார். அவர் 9 (10) ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து கேப்டன் டூ பிளேசிஸ் 23 (21), மேக்ஸ்வெல் 0 (1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் பேட்டர்களான ராஜத் பட்டீதர் 16 (16), சுயாஷ் பிரபுதேசாய் 2 (7), தினேஷ் கார்த்திக் 6 (4), ஷாபாஸ் அகமது 17 (27) ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

அஸ்வின் 150: இதில், ராஜத் பட்டீதர் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் தனது 150ஆவது விக்கெட்டை பதிவுசெய்தார். டெயிலெண்டர்களிலும் ஹசரங்கா மட்டும் போராட மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்களிலேயே ஆல்-அவுட்டானது.

முதலிடத்தில் ஆர்ஆர்: இதன்மூலம், ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளைும் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் அதிரடி காட்டிய ரியான் பராக் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். புள்ளிகள் பட்டியலில், ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகளுடன் 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 4 தோல்வி) 5ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: PBKS vs CSK: பஞ்சாபிடம் பம்மியது சிஎஸ்கே - ராயுடுவின் வாணவேடிக்கை வீண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.