மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. பஞ்சாப் அணி 188 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது. பஞ்சாப் பேட்டிங்கில் ஷிகர் தவான் - பனுகா ராஜபக்சே ஆகியோர் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, அந்த அணியை வலுவான ஸ்கோர் நோக்கி கொண்டு சென்றனர். இதில், அதிகபட்சமாக தவாண் 88 (59) ரன்களை எடுத்தார். சென்னை சார்பில் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ராயுடு 78: தொடர்ந்து, விளையாடிய சென்னை அணிக்கு ஓப்பனிங் நேற்றும் சரியாக அமையவில்லை. ராபின் உத்தப்பா 1 (7), மிட்சசெல் சான்ட்னர் 9 (15), சிவம் தூபே 8 (7) ஆகியோர் விரைவாக வெளியேறினர். நிதானமாக ஆடிவந்த கெய்க்வாட் 30 (27) அவுட்டானார். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில், ராயுடு அசராமல் ரன் குவித்து வந்தார்.
அரைசதம் கடந்து ஆடிவந்த அவர், 78 ரன்களில் ஆட்டமிழக்க சென்னை அணியின் நம்பிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. 24 பந்துகளில் 47 ரன்கள் தேவைபட்ட நிலையில், ஹர்ஷ்தீப் சிங், ரபாடா கூட்டணி முறையே 17ஆவது, 18ஆவது ஓவர்களில் தலா 6 ரன்களும், 19ஆவது ஓவரில் 8 ரன்கள் என 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தது. இதனால், கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது.
ஆட்டநாயகன் ஷிகர் தவான்: அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தோனி அனுப்பினார். தொடர்ந்து அடுத்த பந்து வைடாக வீசப்பட்டது. மேலும், இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காத தோனி, மூன்றாவது பந்தை தூக்கி அடித்து பேர்ஸ்டோவ்விடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜடேஜா 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தாலும், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது.
-
That's that from Match 38.@PunjabKingsIPL win by 11 runs.
— IndianPremierLeague (@IPL) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/V5jQHQZNn0 #PBKSvCSK #TATAIPL pic.twitter.com/7tfDgabSuX
">That's that from Match 38.@PunjabKingsIPL win by 11 runs.
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
Scorecard - https://t.co/V5jQHQZNn0 #PBKSvCSK #TATAIPL pic.twitter.com/7tfDgabSuXThat's that from Match 38.@PunjabKingsIPL win by 11 runs.
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
Scorecard - https://t.co/V5jQHQZNn0 #PBKSvCSK #TATAIPL pic.twitter.com/7tfDgabSuX
இதன்மூலம், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். புள்ளிகள் பட்டியலில், பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 6ஆவது இடத்திலும், சென்னை 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 6 தோல்வி) 9ஆவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: MI vs LSG: சச்சினை ஏமாற்றிய மும்பை - தொடர்ந்து 8ஆவது தோல்வி; ராகுல் சதம்!