ETV Bharat / sports

CSK vs GT: மில்லரின் மிரட்டலடியில் மிரண்டது சிஎஸ்கே - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. குஜராத் சார்பாக 94 ரன்களை குவித்த டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

IPL 2022 MATCH 29 CSK VS GT HIGHLIGHTS
IPL 2022 MATCH 29 CSK VS GT HIGHLIGHTS
author img

By

Published : Apr 18, 2022, 7:33 AM IST

புனே: 15ஆவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் நேற்றிரவு (ஏப். 17) நடைபெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.

முதல் ஆப்கன் கேப்டன்: டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் காரணமாக நேற்று ஓய்வளிக்கப்பட்டதால், ரஷித் கான் கேப்டன் பொறுப்பேற்றார். ஐபிஎல் வரலாற்றில், கேப்டனாகும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை ரஷித் பெற்றார். மேலும், குஜராத் பிளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா, மேத்யூ வேட் ஆகியோருக்கு பதிலாக விருத்திமான் சாஹா, அல்ஸாரி ஜோசப் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மீண்டு வந்த ருதுராஜ்: இதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 73 (48) ரன்களையும், அம்பதி ராயுடு 46 (31) ரன்களையும் சேர்த்தனர். குஜராத் பந்துவீச்சில் ஜோசப் 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, யாஷ் தயாள் ஆகியோர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பவர்பிளே பந்துவீச்சு: 170 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. இந்த தொடரில், சென்னை அணியின் பவர்பிளே பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்து வந்தது. ஆனால், நேற்றைய போட்டியில், முதல் நான்கு ஓவர்களிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், விஜய் சங்கர், அபினவ் மனோகர் ஆகியோரை சென்னை பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். இதனால், குஜராத் அணி பவர்பிளே ஓவர்கள் முடிவில் 37/3 என்ற நிலையில் இருந்தது.

6ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்: இதன்பின்னர் வந்த சாஹா, திவாத்தியா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி குஜராத் அணிக்கு பெரும் அழுத்தத்தை உண்டாக்கினர். இருப்பினும், மறுமுனையில் டேவிட் மில்லர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரோடு கேப்டன் ரஷித் கானும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒருகட்டத்தில் 17 ஓவர்கள் முடிவில் 122/5 என்ற நிலையில் குஜராத் இருந்தது. அதாவது 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது.

கேப்டனின் மிரட்டல் கேமியோ: அப்போது 18ஆவது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். ரஷித் கான், அந்த ஓவரில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரியை பறக்கவிட்டு ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். அந்த ஓவரில் 25 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால், 19ஆவது ஓவர் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரில், ரஷித் கான், ஜோசப் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, 10 ரன்களையும் விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

சொதப்பிய ஜோர்டன்: ரஷித் கான் வெளியேறினாலும், வெறியோடு ஆடி வந்த மில்லர் அப்போது கிரீஸில் இருந்தார். 20ஆவது ஓவரை ஜோர்டன் வீச, முதலிரண்டு பந்துகளில் ரன்னெதும் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தில் அபாரமாக ஃபைன்-லெக் திசையில் ஒரு சிக்சரை பறக்கவிட்ட மில்லர், குஜராத்தின் வெற்றியை ஏறத்தாழ உறுதிசெய்தார்.

மில்லர் தி கில்லர்: ஜோர்டன் வீசிய 4ஆவது பந்தில், மில்லர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். துரதிருஷ்டவசமாக, அந்த பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் வீசப்பட்ட 4ஆவது பந்தை மில்லர் பவுண்டரிக்கு விரட்டினார். இறுதியாக, 5ஆவது பந்தில் 2 ரன்களை எடுத்த மில்லர், 19.5 ஓவர்களில் இலக்கை அடைந்து குஜராத் அணிக்கு 5ஆவது வெற்றியை பெற்றுத்தந்தார். 51 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 94 ரன்களை எடுத்து அசத்திய மில்லர் ஆட்டநாயகனாக தேர்வானார். சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளையும், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முதலிடத்தில் குஜராத்: புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் (5 வெற்றி, 1 தோல்வி), சென்னை அணி 2 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் (1 வெற்றி, 5 தோல்வி) உள்ளன. ஐபிஎல் தொடரின் இன்று (ஏப். 18) நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: PBKS vs SRH: வெற்றி நடைபோடும் ஹைதராபாத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.