ETV Bharat / sports

PBKS vs SRH: வெற்றி நடைபோடும் ஹைதராபாத் - ஐபிஎல் இன்றைய போட்டிகள்

ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

IPL 2022
IPL 2022
author img

By

Published : Apr 17, 2022, 8:27 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஹைதராபாத் அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 60 ரன்களை எடுத்தார். மறுப்புறம் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சார் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நிதான ஜோடி: இதனையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. கேப்டன் வில்லியம்சன் 3 (9) ரன்களில் பெவிலியன் திரும்ப, மற்றொரு ஓப்பனர் அபிஷேக் சர்மா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, முதலில் நிதானமாகவே ஆடியதால், பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 39 ரன்களை அணி எடுத்தது.

அதிரடி ஜோடி: இந்த இணையை ராகுல் சஹார் பிரித்தார். அவர் வீசிய 9ஆவது ஓவரில் அபிஷேக் 31 (25) ரன்களுக்கும், 11ஆவது ஓவரில் திரிபாதி 34 (22) ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து, ஜோடி சேர்ந்த மார்க்ரம் - பூரன் ஆகியோர் கடைசி வரை தங்களின் விக்கெட்டை பறிக்கொடுக்காமல் நின்று விளையாடினர்.

இதன்மூலம், ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி, தொடரில் தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்தது. அந்த வகையில் மார்க்ரம் 41 (27) ரன்களுடனும், பூரன் 35 (30) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் அணி சார்பில் 4 விக்கெட்டுகளை எடுத்த உம்ரான் மாலிக் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

புள்ளிப்பட்டியலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 2 தோல்வி) 4ஆவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 3 தோல்வி) 7ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: CSK vs GT: சென்னை பேட்டிங்; குஜராத்தில் ஹர்திக் கிடையாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.