மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. இதன் 25ஆவது லீக் ஆட்டம் நேற்று (ஏப். 15) பிராபோர்ன் மைதானத்தில் நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 175 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக நிதிஷ் ராணா 36 பந்துகளுக்கு 54 ரன்களையும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளுக்கு 49 ரன்களை எடுத்தனர்.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளுக்கு 28 ரன்களை எடுத்தார். மறுப்புறம் ஹைதராபாத் பந்துவீச்சாளர் டி நடராஜன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த வகையில் 179 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி வீரர்கள் களமிறங்கினர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிங்கிய ராகுல் திரிபாதி 37 பந்துகளுக்கு 71 ரன்களை விளாசினார். மறுப்புறம் ஐடன் மார்க்ரம் 36 பந்துகளுக்கு 68 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்த்தார்.
இறுதியில் 17.5 ஓவர்களில் வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து ஹைதாராபாத் அணி வெற்றிபெற்றது. கொல்கத்தா பந்துவீச்சாளர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆரோன் பின்ச், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேட்ச்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன்(வ), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், அமன் ஹக்கிம் கான், வருண் சக்கரவர்த்தி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேட்ச்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன்(வ), ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
இதையும் படிங்க: CSK vs RCB: உத்தப்பா - தூபே அமைத்த 'பீஸ்ட்' பார்ட்னர்ஷிப்; சிஎஸ்கேவின் மிரட்டல் கம்பேக்!