வான்கடே: 15ஆவது ஐபிஎல் சீசனில் நேற்றிரவு (ஏப். 10) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. போட்டியில், டாஸ் வென்ற லக்னோ, ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
ஹெட்மயர் ராஜஸ்தான் அணியில் ஹெட்மயரின் அதிரடியால் 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் 165 ரன்களை எடுத்தது. ஹெட்மயர் 36 பந்துகளில் 6 சிக்சர்கள், 1 பவுண்டரி உள்பட 59 ரன்களை குவித்தார். லக்னோ பந்துவீச்சில் கிருஷ்ணப்பா கௌதம், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ராஜஸ்தான் பேட்டிங்கில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.
ரிட்டயர்ட் ஆன அஸ்வின்: ராஜஸ்தானின் பேட்டிங் ஆர்டரில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய அஸ்வின் 23 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 28 ரன்களை எடுத்தார். இருப்பினும், அணியின் ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டி, 18.2 ஓவரின்போது தாமாக முன்வந்து ரிட்டயர்ட் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ரியான் பராக் 4 பந்துகளில் 1 சிக்ஸர் உள்பட 8 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
A first for the IPL! It had to be Ashwin 👌 #IPL2022 | #RRvLSG
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
👉 https://t.co/9l9MwZ2jJK pic.twitter.com/ByGc0yytd0
">A first for the IPL! It had to be Ashwin 👌 #IPL2022 | #RRvLSG
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 10, 2022
👉 https://t.co/9l9MwZ2jJK pic.twitter.com/ByGc0yytd0A first for the IPL! It had to be Ashwin 👌 #IPL2022 | #RRvLSG
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 10, 2022
👉 https://t.co/9l9MwZ2jJK pic.twitter.com/ByGc0yytd0
ஏனென்றால், ஹிட்மயர் ஒருபுறம் அதிரடி காட்டி வந்தாலும், மறுபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட ஒரு அதிரடி வீரர் வேண்டும் என்பதால், ரியான் பராக்கை களமிறக்க அஸ்வின் இந்த வியூகத்தை செயல்படுத்தியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து அஸ்வினுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
டி காக் - ஹூடா ஜோடி: இதைத்தொடர்ந்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் ராகுல், கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ஹோல்டர் 8 (14) ரன்களுக்கு விரைவாக இடத்தை காலி செய்ய குவின்டன் டி காக் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.
இந்த ஜோடி சேர்ந்து 38 ரன்கள் எடுத்த நிலையில், தீபக் ஹூடா 25 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, டி காக் 39 (32), ஆயுஷ் பதானி 5 (7), குர்னால் பாண்டியா 22 (15), சமீரா 13 (7) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ஸ்டாய்னிஸ் ராஜஸ்தான் பந்துவீச்சை பதம்பார்த்தார்.
ஸ்ட்ரைக்கில் ஸ்டாய்னிஸ்: இந்நிலையில், கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான பிரசித், போல்ட் ஆகியோர்களுக்கு 4 ஓவர்கள் முடிந்துவிட்ட நிலையில், இளம் வீரர் குல்தீப் சென் அந்த ஓவரை வீச வந்தார். முதல் பந்தில் ஆவேஷ் கான் ஒரு ரன் எடுத்து, ஸ்ட்ரைக்கை ஸ்டானிஸிடம் கொடுத்தார்.
-
WHAT. A. GAME! 👌 👌@rajasthanroyals return to winning ways after edging out #LSG by 3 runs in a last-over finish. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard 👉 https://t.co/8itDSZ2mu7#TATAIPL | #RRvLSG pic.twitter.com/HzfwnDevS9
">WHAT. A. GAME! 👌 👌@rajasthanroyals return to winning ways after edging out #LSG by 3 runs in a last-over finish. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
Scorecard 👉 https://t.co/8itDSZ2mu7#TATAIPL | #RRvLSG pic.twitter.com/HzfwnDevS9WHAT. A. GAME! 👌 👌@rajasthanroyals return to winning ways after edging out #LSG by 3 runs in a last-over finish. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
Scorecard 👉 https://t.co/8itDSZ2mu7#TATAIPL | #RRvLSG pic.twitter.com/HzfwnDevS9
ஆட்டநாயகன் சஹால்: சஹால் 25 வயதான சென், சிறிதும் பதற்றம் இன்றி ஸ்டாய்னிஸிற்கு அடுத்தடுத்த பந்துகளை வீசினார். மூன்று பந்துகளுக்கு ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்காமல் வீச, கடைசி 2 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட , ஸ்டாய்னிஸ் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டாலும் லக்னோ 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சு சார்பில் சஹால் 4 விக்கெட்டுகளையும், டிரன்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் சென் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில், சஹால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
புள்ளிப்பட்டியலும் இன்றைய போட்டியும்: புள்ளிப்பட்டியலில், ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 1 தோல்வி) முதல் இடத்திலும், லக்னோ அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 தோல்வி) 5ஆவது இடத்திலும் உள்ளன. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கும்.
இதையும் படிங்க: IPL 2022: ஷா, வார்னர் அதிரடி.. டெல்லியிடம் வீழ்ந்த கொல்கத்தா!