ETV Bharat / sports

ரிக்கி பாண்டிங்கிடம் மனவலிமையை பெற்றேன்- லலித் யாதவ்! - ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்கிடம் மனவலிமையை பெற்றேன் என 25 வயதான இளம் ஆல்ரவுண்டர் லலித் யாதவ் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.

Lalit Yadav
Lalit Yadav
author img

By

Published : Apr 9, 2022, 5:36 PM IST

ஹைதராபாத்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் லலித் யாதவ். மும்பைக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் 38 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியிலும் சரியான நேரத்தில் 25 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் லலித் யாதவ் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது ஈடிவி பாரத்தின் ஆயுஷ்மான் பாண்டே கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கேள்வி: ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் ஒரே அணியில் விளையாடுவது எப்படி இருக்கிறது? அவர்களிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

பதில் : ரிஷப் பண்ட் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து நிறைய மனவலிமையை பெற்றேன்.

கேள்வி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உங்கள் பங்களிப்பு என்ன? என்ன மாதிரியான திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?

பதில் : நான் என்னை ஒரு ஆல்ரவுண்டர் ஆகவே திட்டமிடுகிறேன். அதற்காகவே உழைக்கிறேன். ஒரு முழு நேர ஆல்ரவுண்டர் ஆக வேண்டும் என்பதே என் இலக்கு. அதற்கு தேவையான அனைத்து குணங்களையும் கற்று வருகிறேன்.

கேள்வி : நீங்கள் ஒரு ஆல்ரவுண்டர், ஷர்துல் தாகூர் மற்றும் அக்ஸர் பட்டேலிடம் இருந்து என்ன கற்றுகொண்டீர்கள்?

பதில் : நவீனகால கிரிக்கெட்டில், குறிப்பாக டி20யில் ஆல்-ரவுண்டர்கள் மிகவும் முக்கியமானவர்கள். சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் ஆல்ரவுண்டர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு வாய்ப்பளிக்கிறது. அதற்கு முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நன்றி, நான் அக்ஸர் சகோதரனுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டேன். ஷர்துல் தாகூரும் அதே மாதிரிதான். நாங்கள் களத்திற்கு வெளியே நல்ல நண்பர்கள்.

கேள்வி: பந்து வீச்சில் ஆல்ரவுண்டர்களின் பங்கு என்ன?

பதில் : பந்து வீச்சில் ஆல்ரவுண்டர்களின் பந்து வீச்சு மிக முக்கியமானது. முக்கிய பவுலர்கள் இல்லாத நேரத்தில் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக பந்துவீசி செயல்பட்டால் வெற்றி பெற முடியும். இக்கட்டமான சூழலில் ஆல்ரவுண்டர்கள் பணி மிக முக்கியமானது.

கேள்வி : இந்தியாவுக்காக விளையாடும் உங்களின் கனவு?

பதில் : கிரிக்கெட் விளையாடும் ஒரு குழந்தைக்கு கூட அந்தக் கனவு இருக்கும். என் கனவும் அதிலிருந்து வேறுபட்டதல்ல. அந்த கனவு 100 சதவீதம் நிறைவேற உழைக்கிறேன்.

இவ்வாறு கிரிக்கெட் வீரர் லலித் யாதவ் தனது பிரத்யேக பேட்டியின்போது தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.