மும்பை: ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக, கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 48 பந்துகளுக்கு 70 ரன்களை குவித்தார். மறுப்புறம் விராட் கோலி முதல் பந்துலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ரஜத் படிதார் 38 பந்துகளுக்கு 48 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 24 பந்துகளுக்கு 33 ரன்களையும் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். அதேபோல, பந்துவீச்சில் ஹைதராபாத் அணியின் ஜகதீஷா சுசித் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
அதன்படி, 178 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். இதனிடையே டெல்லி அணியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்றிரவு சென்னை-டெல்லி இடையேயான போட்டி நடக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி அணியில் மீண்டும் கரோனா... சிஎஸ்கே போட்டி ரத்தாக வாய்ப்பு...