மும்பை: ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டம் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், "நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்து, ரன் சேஸ் செய்ய விரும்புகிறோம். இந்த சீசன் எங்களுக்கு ஏற்ற இறக்கமாக உள்ளது. சமமான வெற்றிகளில் கவனம் செலுத்த உள்ளோம். எங்களது அணியில் இரண்டு மாற்றங்கள் உள்ளன. மன்தீப், லலித் யாதவ் ஆகியோருக்கு மாற்றாக கே.எஸ்.பாரத், அக்ஸர் இடம்பெற்றுள்ளனர்" என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயின் அலி, எம்எஸ் தோனி(கேப்டன்/கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், ஸ்ரீகர் பாரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த்(கேப்டன்/கீப்பர்), ரோவ்மன் பவல், அக்சர் படேல், ரிபால் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே.
இதையும் படிங்க: RCB vs SRH: ஹைதராபாத் அணிக்கு 193 ரன்கள் இலக்கு