ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் சர்மா இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. ஆறு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது.
பவர்-பிளே முடிந்து, ஏழாவது ஓவரை வீசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர், அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துக்கொடுத்து, ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
ரோஹித் சர்மா 32 (25) ரன்களில் விஜய் சங்கரிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
சூர்யகுமார் 10 (6) ரன்களிலும், டி காக் 40 (39) ரன்களிலும், இஷான் கிஷன் 12 (21) ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 7 (5) ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
பொல்லார்ட் மட்டும் தனியாளாக போராடி 35 (22) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது.
ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது, விஜய் சங்கர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.