துபாய்: ஐபிஎல் 2021 சீசன் கரோனா தொற்றுப்பரவல் காரணமாக, பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில், இத்தொடரின் இரண்டாம் கட்டப்போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன
ஷா அதிரடி
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி டெல்லி அணிக்கு, பிருத்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே பிருத்வி ஷா அதிரடியைத் தொடங்கினார். இருப்பினும், டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் தவான் 7 (7), ஸ்ரேயஸ் ஐயர் 1 (8), அக்க்ஷர் படேல் 10 (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
-
WATCH - First time in cricket: 360° vision of action 👌👌
— IndianPremierLeague (@IPL) October 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
📹📹https://t.co/dbLJdWuN2n #VIVOIPL
">WATCH - First time in cricket: 360° vision of action 👌👌
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
📹📹https://t.co/dbLJdWuN2n #VIVOIPLWATCH - First time in cricket: 360° vision of action 👌👌
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
📹📹https://t.co/dbLJdWuN2n #VIVOIPL
5ஆம் விக்கெட் பாட்னர்ஷிப்
இதனிடையே, 27 பந்துகளில் பிருத்வி ஷா அரைசதம் கடந்தார். ஜடேஜா வீசிய 11ஆவது ஓவரில் மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடித்த ஷா, டூ பிளேசிஸ்ஸின் அபாரமான கேட்சால், 60 (34) ரன்களில் வெளியேறினார்.
இதன்பின்னர், ஜோடி சேர்ந்த பந்த் - ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கியது.
ஐந்தாம் விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு இந்த ஜோடி 83 ரன்களைக் குவித்தது.
19ஆவது ஓவரில் ஹெட்மயர் 37 (24) பிரோவோ பந்துவீச்சில் வீழ்ந்தார். கடைசி ஓவரில் ரிஷப் பந்த் அரைசதம் கடக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்துள்ளது.
-
Innings Break!
— IndianPremierLeague (@IPL) October 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
An all important 83-run partnership between Hetmyer and Pant and a fine knock of 60 from Prithvi Shaw propel #DelhiCapitals to a total of 172/5 on the board.#CSK chase coming up shortly.
Scorecard - https://t.co/38XLwtuZDX #Qualifier1 #VIVOIPL pic.twitter.com/83y74L89Gg
">Innings Break!
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
An all important 83-run partnership between Hetmyer and Pant and a fine knock of 60 from Prithvi Shaw propel #DelhiCapitals to a total of 172/5 on the board.#CSK chase coming up shortly.
Scorecard - https://t.co/38XLwtuZDX #Qualifier1 #VIVOIPL pic.twitter.com/83y74L89GgInnings Break!
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
An all important 83-run partnership between Hetmyer and Pant and a fine knock of 60 from Prithvi Shaw propel #DelhiCapitals to a total of 172/5 on the board.#CSK chase coming up shortly.
Scorecard - https://t.co/38XLwtuZDX #Qualifier1 #VIVOIPL pic.twitter.com/83y74L89Gg
சென்னை அணி பந்துவீச்சில் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, மொயின் அலி, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டூ பிளேசிஸ் அவுட்
-
Nortje strikes in the first over.
— IndianPremierLeague (@IPL) October 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Faf du Plessis is bowled for 1 run.
Live - https://t.co/8TbvEf4Vmd #Qualifier1 #VIVOIPL pic.twitter.com/pU2buwntEN
">Nortje strikes in the first over.
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
Faf du Plessis is bowled for 1 run.
Live - https://t.co/8TbvEf4Vmd #Qualifier1 #VIVOIPL pic.twitter.com/pU2buwntENNortje strikes in the first over.
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
Faf du Plessis is bowled for 1 run.
Live - https://t.co/8TbvEf4Vmd #Qualifier1 #VIVOIPL pic.twitter.com/pU2buwntEN
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சிஎஸ்கே பேட்டிங்கைத் தொடங்கியது. சென்னை அணி தொடக்க வீரர் டூ பிளேசிஸ் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
சென்னை அணி தற்போது 6 ஓவர்கள் முடிவில் 59/1 ரன்கள் என்ற நிலையில், விளையாடிவருகிறது. ருதுராஜ் 16 (10) ரன்களுடனும், ராபின் உத்தப்பா 40 (24) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்: உற்சாகம் அடைந்த ரசிகர்கள்