சென்னை: ஐபிஎல் 2021 தொடரின் 17ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் சொதப்பல்
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர். டி காக் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.
இஷான் கிஷன் ரன்கள் எடுத்த மிகவும் திணறினார். இருந்தாலும் ரோகித் சர்மா தாக்குப்பிடித்து விளையாடினார். இஷான் கிஷன் 17 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை அணி 7 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ரோகித் சர்மா உடன் 3ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.
மறுமுனையில் 40 பந்தில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். கடைசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே சேர்க்க, இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்தில் இருந்தே நிதானமான அட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் 8-வது ஓவரில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் மயங்க் அகர்வால்(25 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
-
Upstox Most Valuable Asset of the Match between @PunjabKingsIPL and @mipaltan is Chris Gayle.@upstox #StartKarkeDekho #VIVOIPL pic.twitter.com/sexa2PteY1
— IndianPremierLeague (@IPL) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Upstox Most Valuable Asset of the Match between @PunjabKingsIPL and @mipaltan is Chris Gayle.@upstox #StartKarkeDekho #VIVOIPL pic.twitter.com/sexa2PteY1
— IndianPremierLeague (@IPL) April 23, 2021Upstox Most Valuable Asset of the Match between @PunjabKingsIPL and @mipaltan is Chris Gayle.@upstox #StartKarkeDekho #VIVOIPL pic.twitter.com/sexa2PteY1
— IndianPremierLeague (@IPL) April 23, 2021
அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய கிறிஸ் கெய்ல் உடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தினர். இறுதியாக 17.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 பந்துகளில் 60 ரன்களும், கிறிஸ் கெய்ல் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 43 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.