ETV Bharat / sports

IPL 2021: தோனிபோல் யாராலும் இருக்க முடியாது, என்னைப் போல் நான் இருக்க விரும்புகிறேன் - சாம்சன்

"தோனிபோல் யாராலும் இருக்க முடியாது. நான் என்னைப்போல் இருக்க விரும்புகிறேன். சஞ்சு சாம்சனாக இருப்பதே போதுமானது" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

Sanju Samson on dhoni
தோனி குறித்து சஞ்சு சாம்சன்
author img

By

Published : Apr 4, 2021, 2:37 PM IST

மும்பை: தோனிபோல் யாராலும் இருக்க முடியாது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சய் சாம்சன் தெரிவித்துள்ளார்.

"தோனிபோல் யாராலும் இருக்க முடியாது. நான் என்னைப் போல் இருக்க விரும்புகிறேன். சஞ்சு சாம்சனாக இருப்பதே போதுமானது.

எங்களது அணிக்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் சீசனில் உங்களுக்காக மிகச் சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி உங்களது முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்போம்" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் அந்த அணியின் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனின் வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் தொடரின் பிற்பகுதியில் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டது.

இதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கழற்றிவிடப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் தென்னாப்பரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு கிறிஸ் மோரிஸ் ஏலம் போயுள்ள நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஷிவம் துபே என பவுலிங்கை வலுப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

அத்துடன் கடந்து சீசனில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனை இந்த சீசனில் கேப்டனாக்கியுள்ளது. இதையடுத்து தோனியுடன் தன்னை இணைத்து கருத்துகள் பகிரப்பட்டு வந்த நிலையில், சஞ்சு சாம்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து 5 முறைக்கு மேல் சுழன்ற கார் - காயமின்றி தப்பித்த ரேஸ் வீராங்கனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.