ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.9) சென்னையில் ரசிகர்களின்றி தொடங்கியது.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் லின்-க்கு பதிலாக குயின்டன் டி காக் இன்றையப் போட்டியில் விளையாடவுள்ளார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கைரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ராகுல் சஹர், மார்கோ ஜேன்சன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஷாகிப் அல் ஹசான், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, பாட் கம்மின்ஸ்