ETV Bharat / sports

IPL 2021: அசத்திய டெல்லி பவுலர்கள்; மும்பை 129/8 - ஆவேஷ் கான்

டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்துள்ளது. டெல்லி பந்துவீச்சாளர்கள் ஆவேஷ் கான், அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அசத்திய டெல்லி பவுலர்கள்
அசத்திய டெல்லி பவுலர்கள்
author img

By

Published : Oct 2, 2021, 5:57 PM IST

சார்ஜா: கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.

இந்நிலையில், 46ஆவது லீக் ஆட்டத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது. சார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

ரோஹித் வெளியேற்றம்

மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, குவின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், மும்பைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் ரோஹித் 7 (10) ரன்களுக்கு ராபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், டி காக் உடன் இணைந்து பவர்பிளேவில் சீராக ரன்களைச் சேர்த்தனர். இதனால், மும்பை அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 35 ரன்களை எடுத்தது.

மிடில்-ஆர்டர் மோசம்

பவர்பிளே முடிந்த ஓவரில், டி காக் 19 (18) ரன்களில் அக்சர் படேலிடம் வீழ்ந்தார். சிறிதுநேரத்தில் சூர்யகுமாரும் 33 (26) ரன்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன்பின், நடுவரிசை பேட்ஸமேன்களான சௌரப் திவாரி 15 (18), பொல்லார்ட் 6 (9), ஹர்திக் பாண்டியா 17 (18), நாதன் கவுல்டைர்-நைல் 1 (2) ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அஸ்வின் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜெய்ந்த யாதவ் சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்திலேயே ஸ்டீவ் ஸ்மிதிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி பந்தில், குர்னால் ஒரு சிக்ஸர் அடிக்க மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்தது.

டெல்லி அணி பந்துவீச்சில் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: தோனி அடித்த சிக்ஸர்... பிளே-ஆஃப் சுற்றில் கெத்தாக நுழைந்தது சிஎஸ்கே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.