ETV Bharat / sports

IPL 2021: ராஜஸ்தான் 164; சாம்சன் அரைசதம் - சாம்சன் அரைசதம்

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சு சாம்சனின் அரைசதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.

IPL 2021
IPL 2021
author img

By

Published : Sep 27, 2021, 10:00 PM IST

துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 40ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று (செப். 27) மோதி வருகிறது.

ராஜஸ்தான் பேட்டிங்

இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, எவின் லீவிஸ், ஜெய்ஸ்வால் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

புவனேஷ்வர் வீசிய இரண்டாம் ஓவரின் முதல் பந்தில், எவின் லீவிஸ் 6 (4) ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும், புவனேஷ்வர் அந்த ஓவரில் ரன் ஏதும் கொடுக்கவில்லை. அடுத்த களமிறங்கிய கேப்டன் சாம்சன், ஜெய்ஸ்வால் உடன் சேர்ந்து விரைவாக ரன்களைச் சேர்த்தார். இதனால், ராஜஸ்தான் அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்களை எடுத்தது.

சாம்சன் - லோம்ரோர்

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 36 (23) பந்துகளில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அதையடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் 4 (6) ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன்பின், சாம்சன் லோம்ரோர் உடன் ஜோடி சேர்ந்து ரன் வேட்டையில் ஈடுபட்டார். சித்தார்த் கவுல் வீசிய 15ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து சாம்சன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். மேலும், 2 சிக்ஸர்களை விளாசிய சாம்சன் மொத்தம் அந்த ஓவரில் மட்டும் 20 ரன்களை குவித்தார்.

இதையடுத்து, கடைசி ஓவரில் சாம்சன் 82 (57) ரன்களிலும், ரியான் பராக் ரன் ஏதும் இன்றியும் வெளியேற, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தார். லோம்ரோர் 29 (28) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஹைதராபாத் பந்துவீச்சு தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது, பேட்டிங்கைத் தொடங்கியுள்ள ஹைதராபாத் அணி 6 ஓவர்களில் 63/1 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது - எஸ்.ஏ.சந்திரசேகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.