ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
தடுமாறிய தொடக்கம்
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். ஆவேஷ் கான் பந்துவீச்சில் விராட் கோலி 12 (11) ரன்களிலும், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் தேவ்தத் படிக்கல் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, ராஜத் பட்டீதர் நிதானமாக ஆட, மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டினார். இரண்டு சிக்சர்கள், 1 பவுண்டரி என 20 பந்துகளில் 25 ரன்களில் அமித் மிஸ்ராவிடம் வீழ்ந்தார்.
டிவில்லியர்ஸ் புயல்
அதன்பின்னர் களம்கண்ட டிவில்லியர்ஸ் ராஜத் பட்டிதர் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 54 ரன்களை எடுத்து ஆறுதளித்தது. அக்சர் பட்டேல் வீசிய 15ஆவது ஓவரில் ராஜத் பட்டீதர் 31 (22) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 6 (9) ரன்களில் வெளியேறினார். டிவில்லியர்ஸ், தான் சந்தித்த 35 பந்துகளில் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார்.
ஸ்டாய்னிஸ் வீசிய 20ஆவது ஓவரில் மூன்று சிக்சர்கள் உள்பட 22 ரன்களைக் குவித்து டிவில்லியர்ஸ் அசத்தினார். இதன்மூலம் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களைக் குவித்தது.
டிவில்லியர்ஸ் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா, ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
அகமதாபாத் மைதானத்தில் காற்று மிக வேகமாக வீசியதால், மைதானம் புழுதிமயம் ஆனது. ஆதலால் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்குவதற்குச் சற்று தாமதமானது.
-
🌪has enveloped Ahmedabad and the start of play has been delayed. It should clear up soon. 🤞🏾https://t.co/NQ9SSSBbVT #DCvRCB #VIVOIPL pic.twitter.com/F8E4EAIX0q
— IndianPremierLeague (@IPL) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🌪has enveloped Ahmedabad and the start of play has been delayed. It should clear up soon. 🤞🏾https://t.co/NQ9SSSBbVT #DCvRCB #VIVOIPL pic.twitter.com/F8E4EAIX0q
— IndianPremierLeague (@IPL) April 27, 2021🌪has enveloped Ahmedabad and the start of play has been delayed. It should clear up soon. 🤞🏾https://t.co/NQ9SSSBbVT #DCvRCB #VIVOIPL pic.twitter.com/F8E4EAIX0q
— IndianPremierLeague (@IPL) April 27, 2021
இரண்டாம் இன்னிங்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 172 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்தியது. டெல்லி அணிக்கு ஷிகார் தவான், பிருத்வி ஷா தொடக்கத்தை அளித்தனர். மூன்றாவது ஓவரில் ஜேமிசன் பந்துவீச்சில், தவான் 6 (7) ரன்களில் சஹாலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கடந்த போட்டிகளில் பொறுமையாக ஆடிவந்த ஸ்டீவ் ஸ்மித், இப்போட்டியில் 4 (5) ரன்களில் சிராஜிடம் வீழ்ந்தார்.
சிறிது நேரம் சமாளித்த பிருத்வி ஷா, 18 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 21 ரன்களை எடுத்து ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் இன்னிங்ஸ்
அதன்பின் ஸ்டோய்னிஸ் உடன் இணை சேர்ந்த டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் விறுவிறுவென ரன்களைச் சேர்த்தார். இந்த ஜோடி 45 ரன்களை எடுத்த நிலையில், ஸ்டோய்னிஸ் விக்கெட்டை ஹர்ஷல் பட்டேல் கைப்பற்றினார். ஸ்டோய்னிஸ் 22 (17) ரன்களை எடுத்தார்
அதன்பின் ஹெட்மயர் களமிறங்கினார். ரிஷப் நிதானமாக ஆட, ஹெட்மயர் அடித்து ஆடத் தொடங்கினார். சிராஜ் வீசிய 14ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி ஹெட்மயர் டெல்லி அணியின் ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.
இறுதி ஓவர் திரில்
கடைசி மூன்று ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18ஆவது ஓவரை ஜேமிசன் வீசினார். ஓவரின் இரண்டாவது, நான்காவது, ஆறாவது பந்துகளில் மூன்று சிக்சர்களைப் பறக்கவிட்ட ஹெட்மயர் மொத்தம் 21 ரன்களைக் குவித்து, ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பினார்.
இந்த ஜோடி ஹர்ஷல் வீசிய 19ஆவது ஓவரில் 11 ரன்களை எடுக்க, ஹெட்மயர் 23 பந்துகளில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் டெல்லி வெற்றி என்ற நிலையில் சிராஜ் பந்துவீச வர, பேட்டிங் முனையில் பந்த் இருந்தார். முதல் இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்னை இருவரும் சேர்க்க, மூன்றாவது பந்தை ரிஷப் பந்த் வீணடித்தார்.
மூன்று பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் சேர்த்த பந்த் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இருப்பினும், ஆட்டத்தை வெல்ல 10 ரன்கள் வேண்டும் என்பதால் ரிஷப் பந்தின் மேல் அழுத்தம் அதிகரித்தது.
ஐந்தாவது பந்தில் பவுண்டரி விரட்டி, கடைசி பந்தில் சிக்சர் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் ரிஷப் பந்த் தயாராக இருந்தார். இதனால் சிராஜ் வீசிய வொய்டான பந்தை அடித்ததால், பவுண்டரியைத்தான் ரிஷப் பந்தால் எடுக்க முடிந்தது.
-
And rightly so, AB gets the accolades on the night. 👏🏻👏🏻#PlayBold #WeAreChallengers #IPL2021 #DCvRCB #DareToDream pic.twitter.com/bqFNM6FF4z
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And rightly so, AB gets the accolades on the night. 👏🏻👏🏻#PlayBold #WeAreChallengers #IPL2021 #DCvRCB #DareToDream pic.twitter.com/bqFNM6FF4z
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021And rightly so, AB gets the accolades on the night. 👏🏻👏🏻#PlayBold #WeAreChallengers #IPL2021 #DCvRCB #DareToDream pic.twitter.com/bqFNM6FF4z
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 27, 2021
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஜேமிசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
டெல்லி அணி தரப்பில் ஹெட்மயர் 53 (23) ரன்களிலும், ரிஷப் பந்த் 58 (48) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
-
It’s where we strive to be and why we #PlayBold. 🙌🏻#WeAreChallengers #IPL2021 #DareToDream pic.twitter.com/xlI8NyTeXE
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s where we strive to be and why we #PlayBold. 🙌🏻#WeAreChallengers #IPL2021 #DareToDream pic.twitter.com/xlI8NyTeXE
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 28, 2021It’s where we strive to be and why we #PlayBold. 🙌🏻#WeAreChallengers #IPL2021 #DareToDream pic.twitter.com/xlI8NyTeXE
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 28, 2021
பேட்டிங்கில் 75 ரன்களைக் குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியை வென்றதன் மூலம், மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிடித்துள்ளது.
இதையும் படிங்க: 'மீண்டு வர வாழ்த்தியவர்களுக்கு நன்றி'- கிரிக்கெட் வீரர் நடராஜன்