மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், ஷாகிப் அல் ஹாசன் ஆகிய அனுபவ வீரர்களையும், இளம் வீரர்களான பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இருப்பினும் கடந்த போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் கேகேஆர் போராடி வருகிறது.
வருண், ஹர்பஜன் கூட்டணி பவர்பிளேயில் நெருக்கடி கொடுத்தாலும், அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றது. சிஎஸ்கேவில் டூ பிளேசிஸ், ரெய்னா, மொயின் அலி போன்றோர் சுழற்பந்தை அடிப்பதில் வல்லவர்கள் என்பதால் கேப்டன் மோர்கன் இவர்களை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
-
Aim 🎯
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Fire 🔥
Reload 💪
Repeat 🔁#ChinnaThala #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4L3l91wNoe
">Aim 🎯
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 21, 2021
Fire 🔥
Reload 💪
Repeat 🔁#ChinnaThala #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4L3l91wNoeAim 🎯
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 21, 2021
Fire 🔥
Reload 💪
Repeat 🔁#ChinnaThala #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4L3l91wNoe
கொல்கத்தா பேட்டிங்கை பொறுத்தவரை கில், ராணா, திரிபாதி, மோர்கன், ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷாகிப் என வரிசைகட்டி நிற்கின்றனர். இவர்களை செட்டில் ஆக விடாமல் தடுப்பது, சென்னை பவுலர்களுக்கு தலைவலியாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்த வெற்றியினால் உற்சாகமாக இருந்தாலும், இன்னும் ஒரு சில ஓட்டைகள் அணியில் உள்ளன. பந்து ஸ்விங் ஆகும்போது மட்டும் தான் தீபக் சாஹரால் விக்கெட் வீழ்த்த முடிகிறது. அதேபோல் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஃபார்மில் இல்லாததால், அது பவர்பிளேயில் சிஎஸ்கேவிற்கு பின்னடவை ஏற்படுத்தி வருகின்றது.
சிஎஸ்கேவில் ஒன்பதாவது வீரர் வரை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், பெரிய இலக்குகளை எட்ட ஒரு பேட்ஸ்மேனாவது நிலைத்து நின்று ஆடியாக வேண்டும். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மொயின் அலி மிரட்டி வருகிறார்.
-
The Knights will aim to get back to winning ways in the first of their two clashes in Mumbai!
— KolkataKnightRiders (@KKRiders) April 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
More about #KKRvCSK ⤵️#KKRHaiTaiyaar #IPL2021https://t.co/HZjLrfHb8y
">The Knights will aim to get back to winning ways in the first of their two clashes in Mumbai!
— KolkataKnightRiders (@KKRiders) April 21, 2021
More about #KKRvCSK ⤵️#KKRHaiTaiyaar #IPL2021https://t.co/HZjLrfHb8yThe Knights will aim to get back to winning ways in the first of their two clashes in Mumbai!
— KolkataKnightRiders (@KKRiders) April 21, 2021
More about #KKRvCSK ⤵️#KKRHaiTaiyaar #IPL2021https://t.co/HZjLrfHb8y
இந்த தொடரில் அதிக நெட் ரன்ரேட்டை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வென்றால், ஹாட்ரிக் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. கொல்கத்தா அணி மூன்றில் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதுவரை இரு அணிகளும் 25 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 15 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 9 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: IPL 2021 PBKS vs SRH: இன்றைய போட்டியில் வெல்லப்போவது போவது யார்?