ETV Bharat / sports

ஐபிஎல் 2021: வீரர்கள் ஏலம் நேரடித் தகவல்கள் உடனுக்குடன் - வீரர்கள் ஏலம் 2021

IPL 2021 Auction Live Updates: 291 players to go under hammer today

author img

By

Published : Feb 18, 2021, 2:25 PM IST

Updated : Feb 18, 2021, 9:02 PM IST

20:40 February 18

சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி, ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

20:07 February 18

கருண் நாயரை வாங்கிய கொல்கத்தா!

டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து வரலாறு படைத்த கருண் நாயரை கொல்கத்தா அணி 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல், ஆல்-ரவுண்டர் பென் கட்டிங்கை 75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

19:59 February 18

வங்க மொழி கவிஞராக மாறவிருக்கும் ஹர்பஜன்!

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

19:58 February 18

சாம் பில்லிங்ஸை வாங்கிய டெல்லி!

இங்கிலாந்தின் அதிரடி ஆட்டகாரரான சாம் பில்லிங்ஸை டெல்லி 2 கோடிக்கு வாங்கியுள்ளது.

19:58 February 18

கெதர் ஜாதவை வாங்கிய ஹைதராபாத்!

சென்னை அணியில் விளையாடிவந்த கெதர் ஜாதவை ஹைதராபாத் அணி அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது. 

19:58 February 18

ஜிம்மி நீஷமை வாங்கிய மும்பை!

நியூசிலாந்து ஆல்-ரவுண்டரான ஜிம்மி நீஷமை மும்பை இந்தியன்ஸ் அணி 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. 

19:58 February 18

ராஜஸ்தான் அணியில் கலக்கவிருக்கும் குல்தீப் யாதவ்!

குல்தீப் யாதவை ராஜஸ்தான் அணி 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

19:58 February 18

சென்னை அணியில் இடம்பிடித்த ஹரிசங்கர் ரெட்டி!

இளம் வீரர்களான ஹரி நிஷாந்தையும் ஹரிசங்கர் ரெட்டியையும் சென்னை அணி 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

19:43 February 18

இங்கிலாந்து ஓபனிங் பேட்ஸ்மேனை வாங்கிய ராஜஸ்தான்!

இங்கிலாந்தின் தொடக்க வீரரான லியம் லிவிங்ஸ்டனை ராஜஸ்தான் 75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது

19:42 February 18

பெங்களூருவில் இடம்பிடித்த டேனியல் கிறிஸ்டியன்!

ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டரான டேனியல் கிறிஸ்டியனை பெங்களூரு அணி 4.8 கோடிக்கு வாங்கியுள்ளது.

19:38 February 18

ஆல்-ரவுண்டர்களை குறிவைக்கும் பஞ்சாப்!

கேரளா ஆல்-ரவுண்டரான ஜலஜ் சக்சேனாவை 30 லட்சத்திற்கும் மேற்கிந்திய தீவுகளின் ஃபேபியன் ஆலனை 75 லட்சத்திற்கும் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அதேபோல், ஜார்க்கண்ட்டின் உத்கர்ஷ் சிங்கை 20 லட்சத்திற்கும் வாங்கியுள்ளது.

19:22 February 18

ஏலத்தில் எடுக்கப்படாத மிட்செல் மெக்கிளெனகன்!

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் மெக்கிளெனகன், ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

19:21 February 18

ஆல்-ரவுண்டர் மோய்சஸ் ஹென்ரிக்ஸை வாங்கிய பஞ்சாப்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டரான மோய்சஸ் ஹென்ரிக்ஸை பஞ்சாப் கிங்ஸ் அணி 4.20 கோடிக்கு வாங்கியுள்ளது.

18:50 February 18

டெல்லியில் டாம் குரான்!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டாம் குரானை டெல்லி 5.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

18:46 February 18

வரலாறு படைத்த கைல் ஜேமீசன்!

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமீசனை 15 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

18:44 February 18

புஜாராவை வாங்கிய சென்னை அணி!

ராகுல் திராவிட்டுக்கு பிறகு பேட்டிங் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் புஜாராவை சென்னை அணி 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

18:43 February 18

முதல் சீசனில் கலக்கிய ஷான் மார்ஷ் - 'அன்சோல்ட்'

முதல் சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. அதேபோல், மேற்கிந்திய தீவுகளின் டாரென் பிராவோ, நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், மார்ட்டின் குப்தில் ஆகியோரையும் எந்த அணியும் வாங்கவில்லை.

18:42 February 18

லெக் ஸ்பின்னர் கரியப்பாவை வாங்கிய ராஜஸ்தான்!

கர்நாடகாவை சேர்ந்த லெக் ஸ்பின்னர் கரியப்பாவை ராஜஸ்தான் அணி 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. முன்னதாக, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

18:41 February 18

டெல்லி அணியில் தமிழக வீரர்!

தமிழ்நாட்டை சேர்ந்த சித்தார்த்தை டெல்லி அணி 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

18:09 February 18

பஞ்சாப் அணியில் ரிலி மெரிடித்!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ரிலி மெரிடித்தை பஞ்சாப் அணி 8 கோடிக்கு வாங்கியுள்ளது.

18:09 February 18

ராஜஸ்தானுக்காக விளையாடவுள்ள சேத்தன் சகாரியா!

சவுராஸ்டிராவை சேர்ந்த சேத்தன் சகாரியாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.20 கோடிக்கு வாங்கியுள்ளது.

18:09 February 18

லூக்மேன் மேரிவாலாவை வாங்கிய டெல்லி!

பரோடாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லூக்மேன் மேரிவாலாவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

18:09 February 18

ஏலத்திய அசத்திய தமிழக வீரர் ஷாருக் கான்!

தமிழ்நாட்டை சேர்ந்த ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் ஷாருக் கானை, பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடிக்கு வாங்கியுள்ளது. அவரின் தாயரின் உறவினர்கள் பாலிவுட் நடிகரான ஷாருக் கானின் தீவிர ரசிகர்கள் என்பதால், அந்த பெயரையே வைக்க வேண்டும் என வற்புறுத்தி வைத்துள்ளனர்.

இறுதி ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், வரும் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். 

17:48 February 18

பெங்களூருவுக்காக விளையாடவுள்ள முகமது அசாரூதின்

சையது முஷ்டாக் அலி போட்டியின் வரலாற்றிலேயே இரண்டாவது வேகமான சதத்தை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கேரள வீரர் முகமது அசாரூதினை 20 லட்சத்திற்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

17:47 February 18

ஷெல்டன் ஜாக்சனை வாங்கிய கொல்கத்தா!

புதுச்சேரியை சேர்ந்த வீக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஷெல்டன் ஜாக்சனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது

17:34 February 18

விஷ்ணு வினோத்தை வாங்கிய டெல்லி!

கேரளாவின் வலது கை பேட்ஸ்மேனான விஷ்ணு வினோத்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சமத்திற்கு வாங்கியுள்ளது.

17:20 February 18

கிங்ஸ் லெவன் விடுவித்த கௌதமை 9.25 கோடிக்கு எடுத்த சிஎஸ்கே

கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கிருஷ்ணப்பா கௌதமின் அடிப்படை விலையாக 20 லட்சம் ரூபயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியுடன் போராடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

17:13 February 18

தமிழக வீரர்களுக்கு குறி வைக்கும் பஞ்சாப்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிமுக வீரரான ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.  

ஷாருக் கானின் ஆரம்ப விலையாக 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பஜ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

17:09 February 18

அறிமுக வீரர்களை அள்ளிய ஆர்சிபி

அறிமுக வீரர்களான சச்சின் பேபி, ரஜத் பட்டிதர் ஆகியோரை அடிப்படை விலையா 20 லட்சம் ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது.

17:04 February 18

குல்டர் நைலை விடுவித்து மீண்டும் ஏலம் எடுத்த மும்பை

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் குல்டர் நைலை மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு எலம் எடுத்தது. 

முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி நாதன் குல்டர் நைலை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, பின்னர் அணியிலிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

16:54 February 18

சிஎஸ்கேவிலிருந்து மும்பை இந்தியன்ஸிற்கு சென்ற பியூஷ் சாவ்லா

இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவை 2.40 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

16:50 February 18

விலைபோகாத ஹர்பஜன்

நடப்பாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கை ஆரம்ப விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

16:48 February 18

டெல்லி கேப்பிட்டல்ஸில் களமிறங்கும் உமேஷ் யாதவ்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்வை ஒரு கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

16:43 February 18

அறிமுக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் களமிறங்கும் ரிச்சர்ட்சன்

முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ரிச்சர்ட்சன்னை ஏலம் எடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி.

ஏலத்தின் முடிவில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சனை, 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 

16:33 February 18

மும்பை அணியில் ஆடம் மில்னே

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னேவை மும்பை இந்தியன்ஸ் அணி 3.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.  

16:28 February 18

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், இலங்கையின் குசால் பெரேரா ஆகியோர் ஏலம் போகவில்லை.

16:25 February 18

மீண்டும் கேகேஆர்-க்கு திரும்பிய ஷாகிப்

வங்கதேச நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை 3.20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் தங்கள் பக்கம் இழுத்துள்ளது.

16:10 February 18

டேவிட் மாலனை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்

இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேனும், டி20 தரவரிசையில் நம்பர் ஒன் வீரருமான டேவிட் மாலனை 1.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 

16:03 February 18

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ்

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை கிறிஸ் மோரிஸ் படைத்துள்ளார். முன்னதாக, இந்திய வீரர் யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்ததே ஒரு வீரரின் அதிகபட்ச விலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

15:58 February 18

கழட்டிவிடப்பட்ட ஜாதவ்

கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

15:57 February 18

ஷிவம் தூபே

இந்திய ஆலரவுண்டர் ஷிவம் தூபே 4.40 கோடி ரூபாய்க்கு ராதஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

15:52 February 18

சிஎஸ்கேவில் மொயீன் அலி

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மோயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 

15:33 February 18

ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்கு

கிளென் மேக்ஸ்வெல்
கிளென் மேக்ஸ்வெல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான கிளென் மேக்ஸ்வெல் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

மேக்ஸ்வெல்லின் ஆரம்ப விலை 2 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 14.25 கோடி ரூப்பாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

15:19 February 18

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சின் ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கு யாரும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் இந்திய அணியின் ஹனுமா விஹாரியும் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போகவில்லை.

15:16 February 18

டெல்லி கேப்பிட்டல்ஸில் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

15:14 February 18

முன்னணி பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் ஏலம் போகவில்லை

முதல் சுற்று ஏலத்தில் பங்கேற்ற கருண் நாயர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் ஏலம் எடுக்கப்படவில்லை.  

15:12 February 18

முதல் சுற்று ஏலத்திற்கான வீரர்கள் விபரம்

ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), எவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கருண் நாயர் (இந்தியா), ஜேசன் ராய் (இங்கிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஹனுமா விஹாரி (இந்தியா).

14:56 February 18

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது. 

14:41 February 18

ஐபிஎல் 2021 கோப்பை

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

14:14 February 18

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான  வீரர்கள் ஏலம் இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது. இந்த வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 61 வீரர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வுசெய்ய தயாராகிவருகின்றன.  

Last Updated : Feb 18, 2021, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.