ETV Bharat / sports

MI vs KKR: கொல்கத்தாவை துவம்சம் செய்த மும்பை-5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

author img

By

Published : Apr 16, 2023, 7:58 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mumbai team won
மும்பை அணி வெற்றி

மும்பை: 16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ், ஜெகதீசன் களம் இறங்கினர். குர்பாஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தனர். ராணா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடினார் வெங்கடேஷ் ஐயர். மும்பை அணியின் பந்துவீச்சை நான்கு புறமும் சிதறடித்த அவர் சதம் விளாசி அசத்தினார். 51 பந்துகளில் 104 ரன்கள் (6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள்) எடுத்த அவர், ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வரலாற்று சதம்: ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணியை சேர்ந்த வீரர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசியிருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு பிரன்டன் மெக்கல்லம் பெங்களூரு அணிக்கு எதிராக 158 ரன்கள் விளாசினார். அதன்பிறகு அந்த அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், நடப்பு சீசனில் சதம் விளாசியுள்ளார்.

பின்னர் களம் இறங்கிய ஷர்துல் தாகூர் 13, ரிங்கு சிங் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசல் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுக வீரராக களம் இறங்கினார். 2 ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ஷோகீன் 2, க்ரீன், ஜேன்சன், பியூஷ் சாவ்லா, மெரிடித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

186 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி ஆட்டத்தை தொடர்ந்தது. ரோஹித் சர்மா 20 ரன்களில் வெளியேற, இஷான் கிஷண் அதிரடியாக விளையாடினார். 25 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த அவர் வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர் களம் இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியில் இறங்கினார்.

25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 30, நேஹல் வதேரா 6 ரன்களில் வெளியேறினர். 17.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து மும்பை அணி 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிம் டேவிட் 24, க்ரீன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சுயாஷ் சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஷர்துல் தாகூர், வருண் சக்ரவர்த்தி, ஃபர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் தட்டிச்சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.