ஐதராபாத் : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜேசன் ராய் மற்றும் ரஹமுல்லா குர்பாஷ் ஆகியோர் கொல்கத்தா அணியின் இன்னிங்சை தொடங்கினர். கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அமையவில்லை. தொடக்க வீரர் ரஹமுல்லா குர்பாஷ் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்த வந்த வெங்கடேஷ் ஐயரும் 7 ரன் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் தன் பங்குக்கு 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். இதனிடையே கூட்டணி அமைத்த கேப்டன் நிதிஷ் ரானா, ரிங்கு சிங் ஜோடி நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தியது.
அரை சதம் நோக்கி பயணித்த கேப்டன் நிதிஷ் ரானா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிங்கு சிங்கும் 46 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ஆந்திர ரஸ்செல் (24 ரன்) சிறிது நேரம் தாக்குபிடித்தார். மறுபுறம் கொல்கத்தா அணியின் விக்கெட் வரிசை சீட்டு கட்டு போல் கலைந்தது.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 171 ரன் என்ற கவுரமான ஸ்கோரை எட்டியது. அங்குல் ராய் 13 ரன்னுடனும், வைபவ் அரோரா 2 ரன்களுடனும் களத்தில் நின்றனர். ஐதராபாத் அணியின் டி. நடராஜன், மேக்ரோ ஜென்சன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
புவனேஸ்வர் குமார், கேப்டன் எய்டன் மார்க்ராம், கார்திக் தியாகி, மயங்க் மார்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 172 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 18 ரன்னும், அபிஷேக் சர்மா 9 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 20 ரன், ஹரி ப்ரூக் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தனர். 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத் அணி 145 ரன்கள் குவித்து உள்ளது. கேப்டன் எய்டன் மார்க்ராம் 41 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற முயன்ற அப்துல் சமத், வருண் சக்ரவர்த்தி வீசிய கடைசி ஓவரில் சிக்கர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரால் 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்ரவர்த்தின் அபார பந்துவீச்சால் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாகூர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படிங்க : "எனக்கு என்டே கிடையாது" - ஓய்வுகுறித்து டோனி கொடுத்த விளக்கம்!