ETV Bharat / sports

KK vs RCB: 'சம்பவம்' செய்ய காத்திருக்கும் "டு பிளெஸ்ஸி & கோ"- தாக்குப்பிடிக்குமா கொல்கத்தா? - ஐபிஎல் இன்றைய ஆட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. காயம் காரணமாக முன்னணி வீரர்களை இழந்து தவிக்கும் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியைச் சமாளிக்குமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

IPL TODAY MATCH
ஐபிஎல் இன்றைய போட்டி
author img

By

Published : Apr 6, 2023, 3:25 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் ஆட்டத்தில் டு பிளெஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணியும், நிதிஷ் ராணா தலைமையில் கொல்கத்தா அணியும் இன்று (ஏப்ரல் 6) பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் பெங்களூரு அணி களம் இறங்குகிறது. அதேநேரம், கடந்த போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதிய கொல்கத்தா, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால், நடப்புத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய அந்த அணி போராடும் என எதிர்பார்க்கலாம்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸி, கோலி, மேக்ஸ்வெல், பிரேஸ்வெல் ஆகியோர் எதிரணி பந்து வீச்சாளர்களை மிரட்டக் கூடியவர்கள். கடந்த ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதிய பெங்களூரு அணியில், விராட் கோலி 82 ரன்கள், டு பிளெஸ்ஸி 73 ரன்கள் குவித்து அசத்தினர். இன்றைய ஆட்டத்திலும் பெங்களூரு வீரர்களின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கலாம். தினேஷ் கார்த்திக், பிரபுதேசாய், சபாஸ் அகமது ஆகியோர் கணிசமான ரன்களை குவித்தால் கொல்கத்தா அணிக்கு நிச்சயம் நெருக்கடி தர முடியும். பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், டேவிட் வில்லே, கரண் சர்மா ஆகியோர் முழுத் திறமையை வெளிப்படுத்தினால், கொல்கத்தா அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.

"புத்துணர்ச்சியுடன் கோலி": 2021 ஐபிஎல் தொடருக்குப் பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். தற்போது அவர் ரன் குவிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சிறிது காலம் ரன் குவிக்கத் திணறி வந்த அவர், தற்போது ஃபார்முக்கு திரும்பியிருப்பது, பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.

இதுகுறித்து பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் கூறுகையில், "அதிக ஆற்றலுடன் சிறந்த வீரராக கோலி உள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகி, சற்று ஓய்வில் இருந்த அவர் நடப்பு சீசனில் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார். முன்பை விட சமீபத்திய நேர்காணல்களில் அவர் நகைச்சுவையுடன் பேசுகிறார். அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதையும் மறுக்க முடியாது" என கூறினார்.

கொல்கத்தாவைப் பொறுத்தவரை அந்த அணி, சொந்த மண்ணில் களம் இறங்குவது பலமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் காயம் காரணமாக கடந்த சீசனின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகீப்-அல்-ஹாசன் ஆகியோர் இத்தொடரில் இடம்பெறாதது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்டதால், டக்வொர்த் முறைப்படி கொல்கத்தா அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற அந்த அணி வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதை மறுக்க முடியாது.

மந்தீப் சிங், ரஹ்மனுல்லா, கேப்டன் நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். அதேநேரம் பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொல்கத்தா அணி பெற்றுள்ளது. உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசலும் கொல்கத்தா அணியின் முக்கிய பலம். ஒட்டுமொத்த அணியும் பொறுப்பாக விளையாடினால், பெங்களூரு அணியை கட்டுப்படுத்தலாம்.

"வருகிறார் ஷாருக்கான்": பாலிவுட் நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், 4 ஆண்டுகளுக்குப் பின் ஈடன் கார்டன் மைதானத்துக்கு இன்று வர உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடைசியாக அவர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தை கண்டுகளித்தார்.

ஜேசன் ராய் ஒப்பந்தம்: இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை, நடப்பு ஐபிஎல் சீசனுக்காக கொல்கத்தா அணி ரூ.2.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. வரும் 9ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் 30 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 16 ஆட்டங்களிலும், பெங்களூரு 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில், பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஈடன் கார்டனில் போட்டி: கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் 9ஆவது லீக் ஆட்டம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

கொல்கத்தா உத்தேச அணி: மந்தீப் சிங், ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ரசல், சுனில் நரேன், ஷ்ரதுல் தாகூர்/ குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி.

பெங்களூரு உத்தேச அணி: டு பிளெஸ்ஸி (கேப்டன்), விராட் கோலி, மேக்ஸ்வெல், பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், சாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், டேவிட் வில்லே, கரண் சர்மா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.