டெல்லி 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணியில் தொடக்க வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்கள் விராட் கோலி (55 ரன்) கேப்டன் பாப் டூ பிளிஸ்சிஸ் (45 ரன்) உதவியுடன் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி தொடக்க வீரர் பிலிப் சால்ட்டின் அபார ஆட்டத்தால் ரன் விகிதம் ராக்கெட் வேகத்தில் சென்றது. பிலிப் சால்ட் 87 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 16 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்க்ள் எடுத்து டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.