ETV Bharat / sports

DC vs CSK: 'சென்னை அணிக்கு விசில் போடு'... பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்! - சென்னை டெல்லி மோதல்

டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Chennai team
சென்னை அணி
author img

By

Published : May 20, 2023, 10:47 PM IST

டெல்லி: ஐபிஎல் தொடரின் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். 50 பந்துகளை சந்தித்த அவர் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களை குவித்தார். மேலும் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்களை சேர்த்தது.

பின்னர், களம் இறங்கிய ஷிவம் துபே 22 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கான்வே 87 ரன்களுக்கு (3 சிக்ஸர், 11 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. ஜடேஜா 20, தோனி 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை கலீல் அகமது, நார்ஜியா, சக்காரியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து 224 ரன்கள் இமாலய இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்தது டெல்லி அணி. சிஎஸ்கே அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி வீரர்கள் தடுமாறினர். ப்ரித்வி ஷா 5, பில் சால்ட் 3 ரன்களில் வெளியேறினர். ரோசோவ் டக் அவுட்டானார். எனினும், மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் வார்னர் அரைசதம் விளாசினார். ஆனாலும் பிற வீரர்கள் அவருடன் இணைந்து விளையாட தவறினர்.

யஷ்துல் 13, அக்சர் படேல் 15, ஹகீம் கான் 7, லலித் யாதவ் 6, குல்தீப் யாதவ் 0 என அடுத்தடுத்து நடையை கட்டினர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நார்ஜியா, சக்காரியா ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை சாஹர் 3, தீக்சனா, பதிரனா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். தேஷ்பாண்டே, ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 17 புள்ளிகளுடன் (நிகர ரன் ரேட்-0.652) புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு சென்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

மஞ்சள் படையின் சாதனை: 14 ஐபிஎல் சீசனில் விளையாடிள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.