மும்பை : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எல் கிளாசிகோ போட்டி என அழைக்கப்படும் சென்னை - மும்பை இடையிலான போட்டியை காண ரசிகர்கள் குவிந்தனர். டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினர். 21 ரன்கள் எடுத்திருந்த போது தேஷ் பாண்டே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 32 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 12 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த முறையும் ஏமாற்றினார். அவர் சான்ட்னர் பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் டோனியின் நுட்பமான டிஆர்எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஆட்டமிழந்தார். 7 புள்ளி 1-வது ஓவரில், சாண்டனர் வீசிய பந்தை இறங்கி ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்ற சூர்யகுமார் யாதவ், பேட்டின் நுனியில் பந்து உரசி கேப்டன் டோனியிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். இதில், ஆட்டத்தின் நடுவர் அவுட் வழங்க யோசித்த நிலையில், டோனி டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி ஆவுட் வாங்கினார்.
பொதுவாக டோனி டிஆர்எஸ் கேட்டால் அதில் வரும் முடிவு அவருக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின் டோனி டிஆர்எஸ் கேட்பதை கண்டு மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெசிசன் ரிவ்யூ சிஸ்டம் என அழக்கப்படும் டிஆர்எஸ் முறை டோனி ரிவ்யூ சிஸ்டம் என அழைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டோனி டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி சூர்யகுமார் யாதவை வெளியேற்றிய அடுத்த சில நிமிடங்களில் டோனி டிஆர்எஸ் கேட்கும் படி இருக்கும் புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டானது. பல்வேறு கலவையான கருத்துகளை பதிவிட்டு சென்னை ரசிகர்கள் கொண்டாடினர்.
-
Dhoni review system and the celebration with all CSK players. pic.twitter.com/cJAltuciSe
— Johns. (@CricCrazyJohns) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dhoni review system and the celebration with all CSK players. pic.twitter.com/cJAltuciSe
— Johns. (@CricCrazyJohns) April 8, 2023Dhoni review system and the celebration with all CSK players. pic.twitter.com/cJAltuciSe
— Johns. (@CricCrazyJohns) April 8, 2023
தொடர்ந்து மும்பை அணியில் திலக் வர்மா 22 ரன், அர்ஷத் கான் 2 ரன், டிம் டேவிட் 31 ரன், ஸ்டப்ஸ் 5 ரன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஹிருத்திக் ஷோகீன் 18 ரன்கள் மற்றும் பியூஷ் சாவ்லா 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, சான்ட்னர், தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சிசன்டா மகலா ஒரு விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து 158 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி ஆட்டத்தை தொடங்கியது.
சென்னை அணிக்கும் தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. ரன் கணக்கை துவக்கும் முன்னே சென்னை அணி விக்கெட் கணக்கை துவங்கியது. பெஹரண்டராப் பந்துவீச்சில் சென்னை தொடக்க வீரர் டிவென் கான்வாய் டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டுன், அஜிங்கிய ரஹானா களமிறங்கினார்.
இருவரும் மட்டையை சுழற்றி சென்னை அணியின் ரன் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்ட இருவரும், அவ்வப்போது சிக்சர்கள் பறக்கவிட்டு குழுமியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினர். 27 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரி என 61 ரன்கள் விளாசிய ரஹானே, பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே தன் பங்குக்கு 28 ரன்கள் குவித்தார். தொடர்ச்சியாக அம்பத்தி ராயுடுவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னை அணியை வெற்றி நோக்கி வழிநடத்திச் சென்றனர். 18 புள்ளி 1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களுடனும் அம்பத்தி ராயுடு 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 4 வது இடத்தை பிடித்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 2 வெற்றி 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் தொடர்கிறது.
-
.@ajinkyarahane88 came out all guns blazing with the bat tonight in Mumbai and he becomes our 🔝 performer of the second innings of the #MIvCSK clash in the #TATAIPL 👏🏻👏🏻
— IndianPremierLeague (@IPL) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A look at his batting summary 🔽 pic.twitter.com/ZZQ9iC0UfV
">.@ajinkyarahane88 came out all guns blazing with the bat tonight in Mumbai and he becomes our 🔝 performer of the second innings of the #MIvCSK clash in the #TATAIPL 👏🏻👏🏻
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
A look at his batting summary 🔽 pic.twitter.com/ZZQ9iC0UfV.@ajinkyarahane88 came out all guns blazing with the bat tonight in Mumbai and he becomes our 🔝 performer of the second innings of the #MIvCSK clash in the #TATAIPL 👏🏻👏🏻
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
A look at his batting summary 🔽 pic.twitter.com/ZZQ9iC0UfV
இதையும் படிங்க : RR vs DC: டெல்லி அணியை துவம்சம் செய்த ராஜஸ்தான்.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!