மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-க்கு அளித்த பேட்டியில், “ஸ்ரேயாஸ் ஐயருக்கு இயல்பிலேயே கேப்டன்ஷிப் நன்றாக வருகிறது. அவர் ஆக்ரோஷமான கேப்டன் ஆக செயல்படுகிறார்” என்றார்.
இது குறித்து ரவி சாஸ்திரி, “கேப்டன் பதவி ஸ்ரேயாஸுக்கு இயல்பாக வருகிறது. அவரது ஆக்ரோஷமான கேப்டன்சியைப் பாருங்கள், அவர் முதல்முறையாக கேகேஆரை (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) வழிநடத்துவது போல் தெரியவில்லை.
கடந்த 3 முதல் 4 சீசன்களில் அவர் கேப்டனாக இருப்பது போல் தெரிகிறது, அது அவருடைய எண்ணங்களின் தெளிவின் மூலம் தெரிகிறது. ஒரு பேட்டராக அவர் மனநிலை தெளிவாக உள்ளது. அதே நேரத்தில், ஒரு கேப்டனாக தனது அணியை பிளேஆஃப்களுக்கு அழைத்துச் சென்று பட்டத்தை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.
போட்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களின் போது அவர் பேசிய விதம் எனக்குப் பிடித்திருந்தது, அது அவர் தனது திட்டங்களில் தெளிவாக இருப்பதைக் காட்டுகிறது. அவர் வெகுதூரம் செல்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர்.
ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் அனுபவம் வாய்ந்த வீரர்கள். பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். எனவே ஸ்ரேயாஸ் மிகச்சிறந்த வீரர்களை பெறுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங்கிடம் மனவலிமையை பெற்றேன்- லலித் யாதவ்!