ETV Bharat / sports

SRH vs LSG: ஹைதராபாத்துடன் மோதும் லக்னோ - பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா? - பிளே ஆஃப் சுற்று

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இரு அணிகளுக்குமே அடுத்த சுற்று வாய்ப்பை தீர்மானிக்கக் கூடியது. இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

Today ipl
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : May 13, 2023, 2:15 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் இன்று (மே 13) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 5 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. 11 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. காயம் காரணமாக தொடரில் இருந்து கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ளதால், க்ருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.

முன்னேறுமா லக்னோ?: கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பந்துவீச்சில் அந்த அணி முன்னேற்றம் காண்பது அவசியம். கடந்த ஆட்டத்தில் மொஷின் கான், யஷ் தாகூர், ஸ்டொய்னிஸ் ரன்களை வாரி வழங்கினர். பந்து வீச்சாளர்கள் முழு ஒத்துழைப்பை அளித்தால் தான், ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

பேட்டிங்கில் கைல் மேயர்ஸ், குயின்டான் டி காக் நம்பிக்கை அளிக்கின்றனர். ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன் வலுசேர்க்கின்றனர். தீபக் ஹூடா, கேப்டன் க்ருணல் பாண்ட்யா ஃபார்மை இழந்து தவிக்கின்றனர். கடந்த 5 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி, இனி வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளை பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட, பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிப்பது கடினமாகிவிடும்.

வெற்றி பெற வேண்டிய கட்டாயம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் அந்த அணி 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணியுடன் மோதிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 215 ரன்கள் இலக்கை சேசிங் செய்து அதிர்ச்சி அளித்தது. கடந்த 4 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றிருந்தால் 16 புள்ளிகளை பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கியிருக்கலாம். அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, கிளாசென், ராகுல் திரிபாதி வலுசேர்த்தாலும், கேப்டன் மார்க்ரம், ப்ரூக் நிலைத்து நின்ற விளையாட தவறுகின்றனர். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், நடராஜன் டெத் ஓவர்களை சிறப்பாக வீசுவது, கூடுதல் பலம்.

போட்டி எங்கே?: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ அணிகள் மோதும் லீக் ஆட்டம், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் தொடங்குகிறது.

லக்னோ உத்தேச அணி: குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஆயுஷ் படோனி, க்ருணல் பாண்ட்யா (கேப்டன்), ஸ்டொய்னிஸ், பூரன், ஸ்வப்னில் சிங், யஷ் தாகூர், ரவி பீஷ்னோய், மொஹ்சின் கான், ஆவேஷ் கான்.

சன்ரைசர்ஸ் உத்தேச அணி: அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கிளாசென், மார்க்ரம், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், மார்கோ ஜான்சென், மயங்க் மார்க்கண்டே, புவனேஸ்வர் குமார், நடராஜன்.

Delhi vs Punjab
டெல்லி vs பஞ்சாப்

மற்றொரு ஆட்டம்: இந்நிலையில், இன்று இரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன், 8வது இடத்தில் நீடிக்கிறது.

சென்னை அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்ததால், அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது. டேவிட் வார்னர், பில் சால்ட், மிட்செல் மார்ஷ் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுப்பது அணிக்கு பின்னடைவாக உள்ளது. அக்சர் படேல், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர்.

அதேநேரம், இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், ஜிதேஷ் ஷர்மா சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். ஆல்ரவுண்டர் சாம் கரன் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். ரபாடா, அர்ஷ்தீப் சிங் வேகத்தில் வலுசேர்க்கின்றனர்.

போட்டி எங்கே?: டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லி உத்தேச அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹகீம் கான், லலித் யாதவ், ரிபல் படேல், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

பஞ்சாப் உத்தேச அணி: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), பனுகா ராஜபக்சே/மேத்யூ ஷார்ட், லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், சாம் கரன்/ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லீஸ்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.