ETV Bharat / sports

KKR vs PBKS: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இனி வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது.

கொல்கத்தா பஞ்சாப் மோதல்
Kolkatta vs Punjab
author img

By

Published : May 8, 2023, 2:06 PM IST

கொல்கத்தா: 16வது ஐபிஎல் தொடரின் Rivalry week போட்டிகள் வரும் 16ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு முக்கியமானவை என்பதால், ஒவ்வொரு போட்டி மீதான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. அந்த வகையில் இன்று நடைபெறும் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

வெற்றி பெற வேண்டிய கட்டாயம்: நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று 8வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல குறைந்தது 16 புள்ளிகள் தேவை என்கிற பட்சத்தில், இனி வரும் 4 போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங்கில் ஜேசன் ராய்க்கு, குர்பாஸ் உறுதுணையாக இருந்தால் நல்ல தொடக்கம் அமையும். வெங்கடேஷ் ஐயர் நிலைத்து நின்று ஆட வேண்டும். கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரசல் நம்பிக்கை தருகின்றனர்.

பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கடைசியாக ஹைதராபாத் அணியுடன் மோதிய கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டம் வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதால் கொல்கத்தா அணி வெற்றிக்காக போராடும். மேலும் சொந்த மண்ணில் அந்த அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

பஞ்சாப் எப்படி?: பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கடைசியாக மும்பை அணியுடனான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது. கேப்டன் தவான், லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா அணிக்கு வலுசேர்க்கின்றனர்.

மும்பை அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்களை வீசி 66 ரன்களை வாரி வழங்கினார். அவர் தவறுகளை சரி செய்ய வேண்டியது அவசியம். நேதன் எல்லீஸ், ரிஷி தவான் நம்பிக்கை தருகின்றனர். குறிப்பாக பவர் பிளே, மிடில், டெத் ஓவர்களில் எல்லீஸ் சிறப்பாக பந்துவீசுகிறார். அதேநேரம் ரபாடா ஷார்ட் பந்துகளை வீசுவதில் வல்லவர் என்பதால், அவரை களம் இறக்குவது பற்றியும் அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே, கொல்கத்தா அணிக்கு நெருக்கடி தர முடியும்.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 31 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 20, பஞ்சாப் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

போட்டி எங்கே?: இரு அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

கொல்கத்தா உத்தேச அணி: ஜேசன் ராய், குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆந்த்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரேன், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா/அனுகுல் ராய்.

பஞ்சாப் உத்தேச அணி: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட்/சிக்கந்தர் ராசா, லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஷாருக்கான், ரிஷி தவான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லீஸ்/ரபாடா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.