ETV Bharat / sports

RCB vs LSG: 'கண்ணன் தேவன் டீ புடி'.. பெங்களூரு அணி இந்த சீசனில் எப்படி? - A Special story of ipl 2023

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது லக்னோ. அதேநேரம் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்த பெங்களூரு அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

Today IPL MATCH
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : May 1, 2023, 2:05 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் 257 ரன்களை குவித்து மிரள வைத்தது லக்னோ அணி.

பேட்டிங் பட்டாளம்: கேப்டன் கே.எல்.ராகுல், ஹெட் மேயர்ஸ், படோனி, நிகோலஸ் பூரன் என வலிமை வாய்ந்த பேட்டிங் பட்டாளம் லக்னோவுக்கு பிளஸ். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஸ்டொய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். ஆனால் பந்துவீச்சின் போது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த போது பெரிய அளவில் பாதிப்பில்லை. இருப்பினும் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் தான்.

ஒருவேளை ஆடும் லெவனில் ஸ்டொய்னிஸ் இடம்பெறாவிட்டால், லக்னோ அணிக்கு சற்று பின்னடைவு தான். அவருக்கு பதிலாக குயின்டான் டி காக் களம் இறக்கப்படலாம். எனினும், சொந்த மண்ணில் லக்னோ அணி விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சில் ஆவேஷ் கான், குருணல் பாண்ட்யா, ரவி பீஷ்னோய் நம்பிக்கை தருகின்றனர்.

நம்பிக்கை தரும் மூவேந்தர்கள்: பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. டுபிளெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், கடந்த சில போட்டிகளில் பெங்களூரு அணியை கேப்டனாக விராட் கோலி வழிநடத்தி வருகிறார். பேட்டிங் மட்டுமே செய்யும் டுபிளெஸ்ஸி, அடுத்த இன்னிங்சில் ஓய்வெடுக்கிறார். பெங்களூரு அணியை பொறுத்தவரை டுபிளெஸ்ஸி, விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சபாஸ் அகமது, லோம்ரோர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே, கணிசமான ரன்களை குவிக்க முடியும். கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், சொந்த மண்ணில் பெங்களூரு அணி தோற்றது. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

வருகிறார் ஹேசில்வுட்?: இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கினால் பெங்களூரு அணியின் பந்துவீச்சு பலம் பெறும். முகமது சிராஜ், வைசாக் ஆகியோரும் நம்பிக்கை தருகின்றனர். ஏற்கனவே ஏப்ரல் 10ம் தேதி லக்னோ அணியுடன் மோதிய பெங்களூரு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்கும் வகையில், இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற போராடும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி எங்கே?: பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதும் இன்றைய லீக் ஆட்டம், லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் பெங்களூரு - லக்னோ அணிகள் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில் லக்னோ 1, பெங்களூரு 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த ஆட்டத்தில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு உத்தேச அணி: விராட் கோலி (கேப்டன்), டு பிளெஸ்ஸி, லோம்ரோர், மேக்ஸ்வெல், சபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பிரபுதேசாய், ஹசரங்கா, வைசாக், ஹேசில்வுட், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்.

லக்னோ உத்தேச அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், படோனி, ஸ்டொய்னிஸ்/குயின்டான் டி காக், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்ட்யா, தீபக் ஹூடா, நவீன்-உல்-ஹக், ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான், யஷ் தாகூர், அமித் மிஸ்ரா.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.