ETV Bharat / sports

CSK vs RR: அதிரும் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை அலற விடுமா 'விசில்' சத்தம்? - Etv Bharat IPL 2023 special story

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை சென்னை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி, அந்த இடத்தை தக்கவைக்கும் முனைப்பில் களம் இறங்க உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த சென்னை, இன்றைய போட்டியில் பழிதீர்க்குமா?

Today IPL match
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : Apr 27, 2023, 2:06 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள நிலையில், சென்னை அணி ரசிகர்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.

ரகானே மீது எதிர்பார்ப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், கான்வே 56 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார். இதேபோல் ஃபார்முக்கு திரும்பியுள்ள ரகானே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அசத்தினார். ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா அணிக்கு தங்களது பங்களிப்பை கொடுக்கின்றனர். இதற்கெல்லாம் மேலாக கேப்டன் தோனி, அணிக்கு வலுசேர்க்கிறார். அம்பதி ராயுடுவை இம்பேக்ட் பிளேயராக களம் இறக்க வாய்ப்புள்ளது.

பந்துவீச்சில் சறுக்கல்: எனினும், சென்னை அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாகவே உள்ளது. துஷார் தேஷ்பாண்டே, பதிரானா ஆகியோர் வைடு பந்துகளை வீசுவது இன்னும் குறையவில்லை. மொயீன் அலியின் சுழல் சரியாக எடுபடவில்லை. பந்துவீச்சில் கவனம் செலுத்தினால் மட்டுமே, பலமான பேட்டிங் ஆர்டரை கொண்ட ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியும். காயம் காரணமாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹார் இன்றைய போட்டியிலும் களம் இறங்குவது சந்தேகம் தான்.

மிரட்டும் பேட்டிங்: ராஜஸ்தான் அணி நடப்பு சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூரு அணியுடன் நடந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப போராடும். அந்த அணியில் ஜெய்ஸ்வால், பட்லர், படிக்கல் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றனர். மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மேயர், ஜூரெல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும், தமிழ்நாடு வீரர் அஸ்வின் நெருக்கடியான சூழலில் பேட்டிங்கில் அதிரடி காட்டுகிறார்.

ஹோல்டர் புறக்கணிப்பா?: ஆனால் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டருக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 2 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார். அஸ்வினுக்கு பிறகு தான் அவர் களம் இறக்கப்படுகிறார். பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அஸ்வின் ஆட்டமிழந்த போது 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கூட ஹோல்டருக்கு பதிலாக, அப்துல் பசித் களம் இறக்கப்பட்டார். இனி வரும் ஆட்டங்களில் ஹோல்டருக்கு முன்வரிசையில் வாய்ப்பு தரலாம்.

பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். அஸ்வின், சாஹல், ஆடம் ஸம்பா சுழல் கூட்டணியும் மிரட்டும். இவற்றை எல்லாம் சமாளித்து ராஜஸ்தானை வீழ்த்தி, சென்னை அணி 'விசில்' அடிக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 12ம் தேதி சென்னையில் நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே அணியை 3 ரன்கள் வித்தியாச்தில் ராஜஸ்தான் வீழ்த்தியிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பழிதீர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

ஆட்டம் எங்கே?: சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இன்றைய லீக் ஆட்டம், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 27 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 12, சென்னை 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில், ராஜஸ்தான் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

சென்னை உத்தேச அணி: டேவன் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரகானே, மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மதீஷா பதிரானா/சாட்னர், துஷார் தேஷ்பாண்டே, மகீஷ் தீக்சனா, ஆகாஷ் சிங்.

ராஜஸ்தான் உத்தேச அணி: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஹெட்மேயர், துருவ் ஜூரெல், அஸ்வின், போல்ட், சாஹல், சந்தீப் ஷர்மா, ஆடம் ஸம்பா/ஜேசன் ஹோல்டர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.