ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி!

author img

By

Published : Oct 2, 2020, 7:53 PM IST

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகள் விளையாடிய நபர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.

Suresh raina congrats MS dhoni for most capped in IPL

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.02) நடைபெற்று வரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்தி விளையாடி வருகிறது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது விளையாடி வருகிறது. இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டதின் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில்(194 போட்டிகள்) கலந்து கொண்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 193 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அச்சாதனையை தோனி இன்று முறியடித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துக்கள் மஹி பாய். ஐபிஎல் தொடரில் என்னுடைய சாதனையை நீங்கள் முறியடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். மேலும் நிச்சயம் சென்னை அணி இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:ஃபெடரரின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.