ETV Bharat / sports

#ThankYouWatson ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ஷேன் வாட்சன்! - watson announces retirement

ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஓய்வை அறிவித்துள்ளார்.

shane-watson-calls-time-in-ipl
shane-watson-calls-time-in-ipl
author img

By

Published : Nov 2, 2020, 7:30 PM IST

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் ஷேன் வாட்சன். 39 வயதாகும் இவர், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 கிரிக்கெட் லீக்குகளில் ஆடிவந்தார்.

அதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடும்போது ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை வழங்கினர். 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணிக்கும், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்கும், 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காகவும் ஆடியுள்ளார்.

145 போட்டிகளில் பங்கேற்றுள்ள வாட்சன் 3874 ரன்கள் குவித்துள்ளதோடு, 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அனைவருக்கும் வாட்சன் என்றதும், முக்கியப் போட்டிகளில் சிறப்பாக ஆடக் கூடியவர் என்று நினைவில் வரும். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்காகவும் சரி, ராஜஸ்தான் அணிக்காகவும் சரி, சென்னை அணிக்காகவும் சரி அனைத்து முக்கிய போட்டிகளிலும் மேட்ச் வின்னராக வலம்வந்தவர்.

அதிலும் 2018ஆம் ஆண்டு சென்னை அணி திரும்பி வரும்போது சதம் விளாசி கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார். மீண்டும் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் காலில் காயம் ஏற்பட்டபோதும் கடைசி ஓவர் நின்று வெற்றிக்காக போராடினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த வாட்சனுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. 299 ரன்கள் மட்டுமே அடித்த வாட்சன், ஃபீல்டிங்கின்போது கடினமாக காணப்பட்டார். இதனால் சில போட்டிகளில் இருந்து வாட்சனை சென்னை அணி நீக்கியது.

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

இதனிடையே ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கடைசி போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதியது. அதில் சென்னை அணி வெற்றிபெற்றாலும், வாட்சன் களமிறங்கவில்லை. இந்த போட்டி முடிவடைந்தவுடன் அணி வீரர்களிடமும், சென்னை அணி நிர்வாகத்திடனும் ஓய்வுபெறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை சென்னை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ள நிலையில், #ThankYouWatson என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிந்துவின் ’I RETIRE’ பதிவு பற்றி அவரின் தந்தை விளக்கம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.