துபாய்: அக்டோபர் 9ஆம் தேதி ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் டெல்லியை ராஜஸ்தான் சந்திக்கிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யூஏஇ) நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் 10 புள்ளிகளுடன் மும்பை அணி முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லியை எதிர்கொள்கிறது. டெல்லி அணியை பொருத்தமட்டில் ஸ்ரேயாஸ் ஐயர், பென் ஸ்டோர்க்ஸ் நல்ல பார்ஃமில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பார்ஃமில் உள்ளனர். இவர்கள் தவிர ராகுல் டெவெட்டியா மற்றும் ரியா பராக் ஆகியோரும் நல்ல பாஃர்மில் உள்ளனர். ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
பந்து வீச்சை பொறுத்தமட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்குக்கு பக்க பலமாக திகழ்கிறார். டெல்லி அணியை பொறுத்தமட்டில் அவர்களுக்கு வெற்றி புள்ளி ஒரு பிரச்னை இல்லை. எனினும் அந்த அணியில் அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா இல்லாதது அணிக்கு பின்னடைவு. மேலும் சில வீரர்களும் காயமுற்றுனர்.
இதற்கிடையில் ஷிகர் தவான் அணிக்கு திரும்புகிறார். அது டெல்லி அணிக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம். இந்த இடக்கை ஆட்டக்காரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இக்கட்டான சூழலில் 69 ரன்கள் எடுத்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது. இதுமட்டுமின்றி பிரித்வி ஷா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் நல்ல பாஃர்மில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, அக்ரி படேலைத் தவிர அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் பக்கபலமாக திகழ்வார்கள்.
- வீரர்கள் விவரம்:
- ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஆண்ட்ரூ டை, கார்த்திக் தியாகி, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அங்கித் ராஜ்பூத், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தவதியா, ஜெய்தேவ் உனட்கட், மாயங்க் மார்க்கண்டே, மஹிபால் லோமர், ஓஷேன் தாமஸ், ரியான் பராக், யஷஸ்வி , அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், டேவிட் மில்லர், மனன் வோஹ்ரா, ஷாஷாங்க் சிங், வருண் ஆரோன், டாம் குர்ரான், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆர்ச்சர்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஷிம்ரான் ஹெட்மியர், ககிசோ ரபாடா, அஜிங்க்யா ரஹானே, அமித் மிஸ்ரா, ரிஷாப் பந்த் (வார), இஷாந்த் சர்மா, ஆக்சர் படேல், சந்தீப் லாமிச்சானே, சாமோ பால் , அன்ரிச் நார்ட்ஜே, அலெக்ஸ் கேரி (வார), அவேஷ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020:ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!