ஐபிஎல் தொடரில் இன்று (அக்.21) நடைபெற்று வரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மோர்கன் 30 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஃபிஞ்ச் - படிகல் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
பின்னர் களமிறங்கிய விராட் கோலி - குகீரத் சிங் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் 13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க:தோனி ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர்